நெல்லிக்காயை வைத்து வித்தியாசமாக சட்னி ட்ரை பண்ணிறீங்களா? உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இது தான்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு முதல் தலைமுடி வளர்ச்சி வரை அனைத்திற்கும் பேருதவியாக இருப்பது நெல்லிக்காய். நெல்லிக்காயை ஊறுகாய், தேன் நெல்லி என சாப்பிடுவது போல் சட்னியும் செய்து சாப்பிடலாம்.
image

ஒவ்வொரு மக்களும் தங்கடைய உடல் நலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். உடற்பயிற்சி முதல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது வரை பல வழிமுறைகளை தங்களது வாழ்க்கை முறையில் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். இந்த வரிசையில் நெல்லிக்காய்க்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி, கால்சியம், அயர்ன் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை எப்போதும் வழங்கும் என்பதால் விரும்பிச்சாப்பிடுகிறார்கள். இதையே கொஞ்சம் ருசியாகவும், தினமும் காலை உணவிற்கு சைட் டிஸ்ஸாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் நெல்லிக்காயைக் கொண்டு கொஞ்சம் சட்னி செய்வதற்கு ட்ரை பண்ணுங்கள்.

உடலுக்கு ஆற்றலை அளிக்கும் நெல்லிக்காய் சட்னி:

இட்லி, தோசை, சப்பாத்திக்கு மாற்றாக ஏதாவது சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் நெல்லிக்காய் சட்னி சிறந்த தேர்வாக அமையும். முதலில் இதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • நெல்லிக்காய் - 5
  • தேங்காய் துருவல் - சிறிதளவு
  • பூண்டு பல் - 3
  • சின்ன வெங்காயம் - 5
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகாய் வத்தல் - 3
  • பொரிகடலை - 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - சிறிதளவு

நெல்லிக்காய் சட்னி செய்முறை:

  • உடலுக்கு ஆற்றலை அளிக்கம் நெல்லிக்காய் சட்னி செய்வதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் நெல்லிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி லேசாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் பொரிகடலை, பச்சை மிளகாய், மிளகாய் வத்தல், பூண்டு, உப்பு. கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை,கடுகு சேர்த்து தாளித்து சட்னியில் தாளித்துக் கொட்டினால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் சட்னி ரெடி.
  • ஒன்றிரண்டு நாட்களுக்குப் பயன்படுத்த திட்டம் இருந்தால் கடாயில் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் போதும். இதற்கு கொஞ்சம் அதிகமாக எண்ணெய் சேர்த்துக் கொண்டால் கெடாமல் இருக்கும்.

நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

நெல்லிக்காயில் கலோரிகள், கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. மேலும் உடலில் இரத்தம் குறைவாக இருக்கும் பெண்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கூட நெல்லிக்காயில் செய்யக்கூடிய சட்னியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். அந்தளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன் வசம் கொண்டுள்ளது.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP