seeds cracker recipe for weight loss easy

Weight Loss Snack : உடல் எடையை குறைக்க கடினமாக உள்ளதா, விதைகளை கொண்டு இப்படி ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுங்க!

உடல் எடையை குறைக்கும் முயற்சி எப்போதும் தோல்வி அடைகிறதா? விதைகளை கொண்டு செய்யப்படும் இந்த ஸ்னாக்ஸ் உங்கள் எடை இழப்புக்கு உதவும்...
Editorial
Updated:- 2023-06-20, 10:31 IST

உடல் எடையை குறைப்பதற்காக தவறான உணவு முறையை பலரும் பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு செய்வதால் உடல் எடை குறைந்தாலும் அவை நிரந்தரமாக இருக்காது. இதனால் பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சமச்சீரான உணவுகள் எடுத்துக் கொள்வதில் எந்த சமரசமும் செய்யக்கூடாது. அந்த வகையில் உங்கள் எடை இழப்புக்கு உதவக்கூடிய ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

Seeds Bar : இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை உணவியல் நிபுணரான மன்பிரீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சியா விதைகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபி உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ஸ்னாக்ஸ் ரெசிபி உங்கள் எடை இழப்பை எளிதாக்கும். விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த சீட்ஸ் பாரை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். சீட்ஸ் பார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: வாயில் போட்ட உடனே கரைந்து விடும், கோடைக்கு ஏற்ற சத்தான ராகி கஸ்டர்டு ரெசிபி! 

 

தேவையான பொருட்கள்

seeds snacks for weight loss

  • சியா விதைகள் -  1/4 கப்
  • பூசணி விதைகள் - 1/8 கப்
  • சூரியகாந்தி விதைகள் -  1/4 கப்
  • ஆளி விதைகள் -  1/4 கப்
  • கல் உப்பு - 1/4 டீஸ்பூன்
  • ஓமம் - 1/4 டீஸ்பூன்
  • கடலை மாவு மாவு - 1 தேக்கரண்டி
  • தண்ணீர் - 250 மிலி

செய்முறை

weight loss seeds cracker

  • மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இதை ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும்.
  • இப்போது விதை கலவையை ஒரு பேக்கிங் ட்ரே விற்கு மாற்றி, சமமாக பரப்பி விடவும்.
  • இதை 180 டிகிரி வெப்பத்தில், 45 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கலாம்.
  • ஓவன் இல்லையெனில் குக்கரின் கேஸ்கட் மற்றும் விசிலை கழட்டி விட்டு, ஒரு ஸ்டாண்ட்டின் மீது பேக்கிங் ட்ரேவை வைத்தும் பேக் செய்து கொள்ளலாம்.
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஸ்னாக்ஸை மாலை நேரத்தில் சாப்பிடலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்:  புரதம் நிறைந்த சத்தான காலை உணவு, இனி தோசையை இப்படி ஹெல்த்தியா செஞ்சு குடுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com