Ragi Custard : வாயில் போட்ட உடனே கரைந்து விடும், கோடைக்கு ஏற்ற சத்தான ராகி கஸ்டர்டு ரெசிபி!

கோடை காலத்தில் ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்தால், ஆரோக்கியமான இந்த ராகி கஸ்டர்டு ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

ragi custard recipe for summer dessert

கோடை காலத்தில் நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம் வகைகளில் அதிகப்படியான சர்க்கரையும், கொழுப்புகளும் நிறைந்துள்ளன. இதற்கு மாற்றாக ஆரோக்கியமான இந்த கஸ்டர்டு ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். நிச்சயமாக ஆரோக்கியமான உணவை செய்து கொடுத்த திருப்தி உங்களுக்கு இருக்கும். வாயில் போட்ட உடனே கரையக்கூடிய இந்த அருமையான ராகி கஸ்டர்டு செய்வதற்கு வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை போதுமானது.

ராகியில் புரதம் கால்சியம் அத்தியாவசிய கொழுப்புகள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை ஒரு சூப்பர் ஃபுட் என்று குறிப்பிடலாம். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இந்த அருமையான டெஸர்ட் ரெசிபியை இந்த கோடை காலத்தில் செய்து உண்டு மகிழுங்கள். ராகி கஸ்டர்டு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ragi custard

  • ராகி - 1 கப்
  • துருவிய தேங்காய் - 1 கப்
  • தண்ணீர் - 6 கப்
  • வெல்லம் - ½ கப்
  • நெய் - 2 டீஸ்பூன்
  • ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
  • உப்பு - 1 சிட்டிகை

செய்முறை

ragi custard recipe ragi manna

  • ராகியை கழுவி சுத்தம் செய்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலையில் ராகி உடன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இதனை சுத்தமான ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • வடித்த கலவையை மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து, பாலை மட்டும் வடித்துக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் பொழுது ராகி மற்றும் தேங்காயில் உள்ள பால் முழுவதையும் வீணாக்காமல் எடுத்துக் கொள்ளலாம்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள பாலுடன், ஏலக்காய் பொடி, உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கலக்கவும்.
  • ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இந்தக் கலவை திக்காக மாறும்.
  • இந்த சமயத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். 5 நிமிடங்களுக்கு கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.
  • இதனை நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.
  • பிறகு ஃப்ரீசரில் வைத்து, ஒரு மணி நேரம் கழித்து பரிமாறலாம்.

இந்த ராகி கஸ்டர்டு ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். குழந்தைகள் ஐஸ்கிரீம் கேட்டு அடம் பிடிக்கும் பொழுது இந்த மாதிரி ஆரோக்கியமான டெசர்ட் ரெசிபியை செய்து கொடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி சளி பிடிக்குதா? வாரம் ஒரு முறை இப்படி கற்பூரவள்ளி சட்னி செய்து சாப்பிடுங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP