protein rich breakfast dosa recipe

Protein Rich Dosa : புரதம் நிறைந்த சத்தான காலை உணவு, இனி தோசையை இப்படி ஹெல்த்தியா செஞ்சு குடுங்க!

காலையில் என்ன டிபன் செய்வதென்று குழப்பமா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள புரதம் நிறைந்த சத்தான காலை உணவை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-06-15, 13:15 IST

காலை உணவு மிகவும் அத்தியாவசியமானது. அன்றைய நாள் முழுவதும், உடல் ஆற்றலுடன் செயல்பட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான காலை உணவை சாப்பிட வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் பலரும் காலை உணவிற்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. போதுமானவரை உங்களுடைய காலை உணவில் காய்கறிகள், பயறு வகைகள் போன்ற ஆரோக்கியமான விஷயங்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

அந்த வகையில் ஒரு ஆரோக்கியமான காலை உணவை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். பொதுவாக பச்சை பயறை கொண்டு செய்யப்படும் தோசையை பெசரட்டு என்று அழைப்பார்கள். இன்றைய ரெசிபியில் பச்சை பயறுடன் கூடுதலாக கீரை சேர்த்து இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றிடுவோம். இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாகவும் வைத்திருக்கும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் இதை சுலபமாக காலை வேளையில் செய்திடலாம். புரதம் நிறைந்த இந்த தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: வாரம் ஒரு முறை இப்படி முருங்கைக் கீரை சாம்பார் வெச்சு சாப்பிடுங்க, பல நோய்களை விரட்டிடலாம்!

 

தேவையான பொருட்கள் 

moon dal pesarattu

  • பச்சை பயறு - 1/2 கப்
  • பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
  • கீரை இலைகள் - 1 கைப்பிடி அளவு 
  • கொத்தமல்லி இலைகள் - 1 கைப்பிடி அளவு 
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி நறுக்கியது - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

spinach moong pesarattu

  • பச்சை பயறு மற்றும் அரிசியை நன்கு கழுவி 4-5 மணி நேரத்திற்கு அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் ஊற வைத்த பச்சைப் பயறு மற்றும் கீரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • இதனுடன் கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து மென்மையான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தோசை ஊற்றுவதற்கு ஏற்ற பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளவும்.
  • இப்போது மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • இந்த தோசை செய்வதற்கு மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
  • மாவை அரைத்த உடனே தோசைகளை செய்ய முடியும்.
  • இப்போது ஒரு தோசை கல்லை சூடாக்கி, கல் சூடானவுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்து தோசையை மெல்லியதாக பரப்பி ஊற்றிக் கொள்ளவும்.
  • இப்போது தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றி, அடுப்பை சற்று அதிகரித்து வைக்கவும்.
  • நீங்கள் விரும்பினால் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
  • தோசை நன்கு வேகும் வரை இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். 

 

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி சளி பிடிக்குதா? வாரம் ஒரு முறை இப்படி கற்பூரவள்ளி சட்னி செய்து சாப்பிடுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com