
உடல் எடையைக் குறைக்கும் டயட் என்பது கடினமானதாகவும், விருப்பப்பட்ட உணவுகளை தவிர்க்கும் விஷயமாகவும் இருக்க வேண்டியதில்லை. சத்தான உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவும், உடல் எடையை இயற்கையாக குறைக்கவும் உங்களுக்கு உதவும்.
இவை வைட்டமின்கள், தாதுக்கள், அன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றால் நிறைந்துள்ளன. எளிதாக எடை குறைக்கும் டயட்டில் சேர்க்கக் கூடிய 5 எளிய உணவுகள் குறித்து இதில் காண்போம்.
வெந்தயம், உடல் எடை குறைப்பிற்கான ஒரு சிறந்த உணவாகும். இதில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதால், பசி எடுக்கும் உணர்வு திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிக்கவும். வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, குழம்பு, பருப்பு அல்லது சப்பாத்தி மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 உணவுகள்; இவற்றை மிஸ் பண்ணாதீங்க மக்களே
தயிர், புரோபயாடிக்குகள் நிறைந்தது. இது குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான குடல், ஊட்டச்சத்துகளை சரியாக எடுத்துக் கொள்ள உதவுகிறது. இது உடல் எடையை நிர்வகிக்க அவசியம் ஆகும். தயிரில் கால்சியமும் காணப்படுகிறது. மதிய உணவு அல்லது இரவு உணவின் போது தயிரை சாப்பிடலாம். வெள்ளரிக்காய், தக்காளி சேர்த்து ராய்தா செய்யலாம் அல்லது பழங்களுடன் கலந்து ஸ்மூத்தியாகவும் குடிக்கலாம்.
மேலும் படிக்க: இருதய ஆரோக்கியம் முதல் உடல் எடை பராமரிப்பு வரை; சிறுதானியங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் எண்ணெய்யில் ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், வயிறு நிரம்பிய உணர்வை தந்து, அதிகப்படியாக சாப்பிடுவதை தடுக்கிறது. சமைப்பதற்கு, குறிப்பாக காய்கறிகளை வதக்குவதற்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சட்னி, பொரியல் அல்லது சாலட்களில் துருவிய தேங்காயை சேர்ப்பது கூடுதல் சுவையை தரும். இளநீர் குடிப்பது நீரேற்றத்துடன் இருக்க உதவும்.

சியா விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தின் ஆற்றல் மையம் போன்றது. தேவையற்ற சிற்றுண்டி சாப்பிடுவதை தடுத்து, குறைந்த கலோரி உட்கொள்ளல் மூலம் எடை குறைப்புக்கு இது வழிவகுக்கிறது. ஒரு தேக்கரண்டி சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எலுமிச்சை சாறுடன் சேர்த்து குடிக்கலாம். ஸ்மூத்திகள், ஓட்ஸ், பழங்கள், சாலட்களின் மேல் தூவியும் இதனை சாப்பிடலாம்.
பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளன. இவை பசியை அடக்கி, உணவுக்கு இடையில் நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்க உதவுகிறது. அளவோடு பாதாம் உட்கொள்வது கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடலாம். சிறு துண்டுகளாக நறுக்கி ஓட்ஸ், சாலட்களுடன் இதை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com