herzindagi
ragi momos recipe healthy

Ragi Momos : குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்கும் ஏற்ற ஹெல்தி ஸ்னாக்ஸ்!

இனி வீட்டில் உள்ளவர்களுக்கு தனி தனியாக ஸ்னாக்ஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை இன்றைய பதிவில் காணலாம்…
Editorial
Updated:- 2023-07-24, 20:19 IST

ராகியில் இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சோகையை போக்குவது முதல் எலும்புகளை வலுப்படுத்துவதை வரை ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது. இதனை கொண்டு ராகி மோமோஸ் செய்ய கற்றுக்கொள்வோம். இதில் சேர்க்கப்பட்டுள்ள காய்கறிகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த ராகி மோமோஸை தாராளமாக ட்ரை செய்யலாம்.

பொதுவாக மோமோஸ் செய்ய மைதா பயன்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த இதே ரெசிபியை கொஞ்சம் மாற்றி அமைத்து ஹெல்த்தியான உணவாக மாற்றிடலாம். ஆனால் நிச்சயமாக சுவையில் எந்த சமரசமும் இருக்காது. ராகி மோமோஸ் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: இப்படி ஜூஸ் போட்டு குடுங்க, யாருமே வேண்டாம்னு சொல்லமாட்டாங்க!

 

தேவையான பொருட்கள்

healthy ragi recipes

  • முட்டை கோஸ் - ½ கப்
  • கேரட் - ½ கப்
  • ப்ரோக்கோலி - ½ கப்
  • காளான் - 200 கிராம்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பூண்டு - 5
  • உப்பு - தேவையான அளவு 
  • மிளகு - தேவையான அளவு
  • கோதுமை மாவு - ½ கப்
  • ராகி மாவு - ½ கப்

செய்முறை

veg ragi momos

  • முதலில் மோமோஸ்கான மாவு தயார் செய்து கொள்ளலாம். ஒரு அகண்ட பாத்திரத்தில் கோதுமை, ராகி மாவு மற்றும் உப்பு கலக்கவும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு சாஃப்ட் ஆக பிசைந்து கொள்ளவும். 
  • இதனை 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • பின்னர் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • இப்போது ஸ்டஃபிங் செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதை வதக்கும் பொழுது தீயை அதிகமாக வைத்து வேகமாக கிளறி, வதக்க வேண்டும்.
  • இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால் மசாலாக்கள் சேர்த்து இந்திய சுவையிலும் ஸ்டஃபிங் தயார் செய்து கொள்ளலாம்.
  • இப்போது தயாராக வைத்துள்ள ராகி மாவிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து பூரியைப் போல திரட்டி கொள்ளவும்.
  • இதில் ஒரு பாதியில் காய்கறிகளை நிரப்பி, கொழுக்கட்டை போல் மூடி ஆவியில் வேகவைக்கவும். உங்களுக்கு விருப்பமான வடிவில் மோமோஸை தயார் செய்து கொள்ளலாம்.
  • தயாராக உள்ள மோமோஸை 7-10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து பரிமாறலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: டக்குனு செய்தாலும், இது ரொம்ப ரொம்ப ஹெல்தி!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com