herzindagi
healthy arisi parupu sadham for lunch box

Quick Lunch Box Recipe : டக்குனு செய்தாலும், இது ரொம்ப ரொம்ப ஹெல்தி!

காலையில் அவசர அவசரமாக மதிய உணவை பேக் செய்த அனுப்பினாலும், அதில் அம்மாவின் அன்பிற்கும் பாசத்திற்கும் குறைவே இருக்காது…
Editorial
Updated:- 2023-07-19, 16:19 IST

மதியம் லஞ்ச் டைமிற்கு முந்தைய பீரியட்டை கடப்பது மட்டும் மிகவும் கொடியது. ஏனோ நிமிடங்களும் மெதுவாக நகர பசி மட்டும் சீக்கிரமே வந்து விடும். பெல் அடித்தவுடன் அம்மா கொடுத்த உணவை ஆர்வமாய் திறந்து, பகிர்ந்து உண்ட பள்ளி பருவ நாட்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காலையில் எழுந்து அவசரமாக சமைத்துக் கொடுத்தாலும் அதில் அம்மாவின் பாசமும் கலந்து இருக்கும்.

ஆனால் கொடுத்து அனுப்பிய உணவை குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவதே அம்மாவிற்கு சந்தோஷம். தன் குழந்தைக்கு பிடித்த உணவை பார்த்து பார்த்து சமைக்கும் அம்மாகளுக்கான ஒரு ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் காலையில் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான ரெசிபி தான் அரிசி பருப்பு சாதம். கொங்கு நாட்டு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: கொண்டக்கடலையை ஊறவைத்தால் போதும், வெறும் 20 நிமிஷத்தில் ஹெல்த்தியான லஞ்ச் செய்திடலாம்!


அரிசி பருப்பு சாதம்

quick lunch box recipes

தேவையான பொருட்கள் 

  • துவரம் பருப்பு -¼ கப்
  • அரிசி - 1 கப்
  • தண்ணீர் - 2 கப்
  • சின்ன வெங்காயம் 15
  • தக்காளி - 1
  • பூண்டு - 3
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன் 
  • சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் 
  • மிளகு பொடி - 1 சிட்டிகை 
  • பெருங்காயம் - ¼ டீஸ்பூன் 
  • நெய் - 2 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

  • நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
  • கடுகு - ½ டீஸ்பூன் 
  • சீரகம் - ½ டீஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய் 1-2
  • கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை

easy lunch box recipes

  • அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • இப்போது ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர் நறுக்கிய பூண்டு சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
  • அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
  • இதனுடன் மஞ்சள் பொடி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • இப்போது தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • தண்ணீர் நன்கு கொதி வரும்போது ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • இதனுடன் மிளகு பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து குக்கரை மூடவும்.
  • இது ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும். பிரஷர் அடங்கும் வரை குக்கரை திறக்க வேண்டாம்.
  • இப்போது நெய் சேர்த்து கிளறவும். அரிசி பருப்பு சாதத்தை உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு அல்லது வெண்டைக்காய் வறுவல் உடன் சேர்த்து பேக் செய்து கொடுக்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: நெய் மணக்க மணக்க சிக்கன் ரோஸ்ட், இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com