தொல்லை தரும் முகப்பருக்களை ஈசியாக போக்கலாம்; இந்த வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றவும்

வீட்டு வைத்திய முறையில் முகப்பருக்களை எவ்வாறு சுலபமாக போக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் காணலாம். குறிப்பாக, இதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் எல்லோராலும் எளிதாக பின்பற்ற முடியும்.
image
image

வெயிலின் தாக்கம் மற்றும் மேலும் சில காரணங்களால் பலருக்கு முகத்தில் பருக்கள் வருவது வழக்கம். இதனை தடுப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று இணையத்தில் அதிகமாக தேடுகின்றனர். குறிப்பாக, வீட்டு வைத்திய முறையில் இதனை தடுக்க முடியுமா என்ற கேள்வியும் மக்களிடையே இருக்கிறது.

முகப்பரு ஏற்பட முக்கிய காரணம், சருமத்தில் சுரக்கும் சீபம் (Sebum) என்ற எண்ணெய் பசையுள்ள திரவம் அதிகமாக உற்பத்தியாவது தான். இந்த சீபம் சரும துளைகளை அடைத்து, வியர்வை, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை சிக்க வைக்கிறது. இதுவே இறுதியாக முகப்பருவாக மாறுகிறது. அதிகப்படியான வியர்வை, தூசு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் இந்த பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.

இதைத் தடுக்க, சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். மேலும், சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவதன் மூலம் முகப்பருக்களை போக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதற்காக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.

கற்றாழை ஜெல்:

சருமத்திற்கு கற்றாழை ஜெல் ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதில் உள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகின்றன. மேலும், சருமத்தை குளிர்ச்சியடைய செய்கின்றன. முகத்தை சுத்தமாக கழுவிய பின், கற்றாழை ஜெல்லை முகப்பரு உள்ள இடங்களில் தடவி விடலாம். சிறிது நேரத்திற்கு பின்னர் இதனை கழுவினால் போதும். இப்படி தொடர்ந்து பயன்படுத்தினால் மிருதுவான, முகப்பரு இல்லாத சருமத்தை பெறலாம்.

Aloe vera

ரோஸ் வாட்டர் (Rose Water):

ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த இயற்கையான டோனர் (Toner) ஆக செயல்படுகிறது. இதை முகத்தில் தினமும் இரண்டு முதல் மூன்று முறை மிருதுவாக தெளித்தால் போதும். இப்படி செய்யும் போது சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதன் மூலம் அதிகப்படியான உஷ்ணத்தால் வரும் கொப்பளங்கள் மற்றும் முகப்பருக்கள் மறையும். குறிப்பாக, முகத்தை சாதாரண நீரால் கழுவிய பின்னர் இதனை பயன்படுத்த வேண்டும்.

மஞ்சள் மற்றும் தேன் கலந்த ஃபேஸ்பேக்:

மஞ்சள் மற்றும் தேன் கலந்த ஃபேஸ்பேக் முகப்பருக்களை குறைக்க மிகவும் பயனுள்ளது. ஒரு சிட்டிகை மஞ்சளை, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து, முகத்தில் தடவ வேண்டும். பின்னர், சுமார் 15 - 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். இதேபோல், முகப்பருக்களை போக்க துளசி இலைகளையும் பயன்படுத்தலாம். இதனை பசை பதத்திற்கு அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவலாம். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

Turmeric facepack

இந்த எளிய மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், சுத்தமாகவும், பருக்கள் இல்லாமலும் வைத்திருக்கலாம். இந்த பொருட்கள் அனைத்தும் விலை குறைவாக இருப்பதால் எல்லோராலும் எளிதாக வாங்க முடியும். இவை தவிர சத்தான உணவு முறை மற்றும் போதுமான தண்ணீர் அருந்துவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP