herzindagi
image

தனியாக பயணம் செய்வதில் விருப்பம் கொண்டவரா நீங்கள்? இந்தியாவில் அவசியம் பார்க்க வேண்டிய 5 இடங்கள்

தனியாக பயணம் செய்வதில் விருப்பம் கொண்டவராக நீங்கள் இருந்தால், இந்தியாவில் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஐந்து இடங்களின் பட்டியல் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. இது பலருக்கு உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-09-18, 11:27 IST

சமீப காலமாக, தனியாக பயணம் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்கள் தனியாக பயணம் செய்வது இப்போது பரவலாக காணப்படுகிறது. சிலருக்கு மன அமைதியை தேடி பயணம் செய்வது வழக்கம். வேறு சிலருக்கோ புதிய இடங்களையும், மனிதர்களையும் காண்பது பிடித்தமான அனுபவம். தனி பயணம் என்பது நமக்கு நாமே நேரம் ஒதுக்கி, புத்துணர்ச்சி பெறுவதற்கான ஒரு சிறந்த வழி. தனிமையாக பயணம் செய்யும் போது நாம் நம்மை பற்றி இன்னும் நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் திட்டம்; எந்தெந்த ஊர்களுக்குத் தெரியுமா?

 

அதனடிப்படையில், தனியாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையிலான ஐந்து தனித்துவமான இடங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம். இவை பாதுகாப்பான இடங்களாகவும் கருதப்படுகிறது.

 

புதுச்சேரி:

 

பிரெஞ்சு கட்டடக்கலை, அழகிய கடற்கரைகள், வண்ணமயமான தெருக்கள் என தனியாக பயணம் செய்பவர்களுக்கு புதுச்சேரி ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது. இங்குள்ள கஃபேக்கள், அரவிந்தர் ஆசிரமம், யோகா மையங்கள் என பல இடங்கள் புத்துணர்ச்சியையும், ஓய்வையும் அளிக்கின்றன. இதனால் பலரும் விரும்பக்கூடிய ஒரு இடமாக புதுச்சேரி இருக்கிறது.

Solo travel

 

ஆலப்புழா, கேரளா:

 

அமைதியான நீர்நிலைகள் கொண்ட இடங்களில் பயணத்தை விரும்புபவர்களுக்கு ஆலப்புழா மிகச் சிறந்த தேர்வு. படகு இல்லங்களில் பயணம், தென்னை மரங்கள் நிறைந்த சூழல் என பயணம் முழுவதும் அமைதியான அனுபவம் கிடைக்கும். தனி பயணத்திற்கு வரும் பெண்கள் இங்குள்ள சூழலில் ஓய்வெடுக்கலாம். அதோடு, கேரளாவின் சுவையான உணவுகளையும் இங்கு சுவைக்கலாம். சுற்றுலா துறை பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், தனி பயணிகளுக்கு இது மிகச் சிறந்த இடம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு; இலவசமாக முருகனின் அறுபடை வீடுகளுக்கு செல்லலாம்

 

ஜெய்சால்மர், ராஜஸ்தான்:

 

ராஜஸ்தானின் பொன் நகரமான ஜெய்சால்மர், தனி பயணத்திற்கு ஏற்ற ஒரு இடம். ஜெய்சால்மர் கோட்டை, வரலாற்று சிறப்புமிக்க ஹவேலிகள், தார் பாலைவனத்தில் ஒட்டக சவாரி என பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இங்கு காத்திருக்கின்றன. உள்ளூர் மக்களின் அன்பான வரவேற்பு, ராஜஸ்தானிய உணவுகள் என பல விஷயங்கள் உங்களைக் கவரும். இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதால், பெண்கள் தனியாகவும், நம்பிக்கையுடனும் சுற்றி பார்க்கலாம் என்று அறியப்படுகிறது.

 

ரிஷிகேஷ், உத்தரகண்ட்:

 

அமைதி மற்றும் ஆன்மிகத்தை விரும்புபவர்களுக்கு ரிஷிகேஷ் மிகச்சிறந்த இடம். யோகா மையங்கள், ஆன்மிக அனுபவங்கள் என இங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதோடு, ரிவர் ராஃப்டிங், பங்கி ஜம்பிங், ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களிலும் ஈடுபடலாம். தங்குவதற்கு இங்கு கட்டணம் குறைவான விடுதிகள் முதல் ஆடம்பரமான ரிசார்ட்டுகள் வரை உள்ளன.

Traveller

 

தர்மசாலா, ஹிமாச்சல பிரதேசம்:

 

மலை பயணத்தை விரும்புபவர்கள் தர்மசாலா மற்றும் மெக்லியோட்கஞ்ச்-ஐ தேர்ந்தெடுக்கலாம். இங்குள்ள வளமான திபெத்திய கலாசாரம், அழகான மடாலயங்கள் மற்றும் இனிமையான உணவகங்கள் ஆகியவை தனி பயணத்திற்கு ஏற்ற அனுபவத்தை தரும். மலையேற்றம், நடைபயணம் போன்ற சாகசங்களுக்கும் இது சிறந்த இடம். இங்குள்ள நட்புணர்வு கொண்ட மக்கள் மற்றும் பாதுகாப்பான சூழல் பலருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com