உங்களுடைய பால்கனியில் அல்லது வீட்டு தோட்டத்தில் கீரை வளர்ப்பது என்பது ஒரு எளிதான மற்றும் மகிழ்ச்சியை தரக்கூடிய அனுபவமாகும். இதன் மூலம் சத்துகள் நிறைந்த கீரையை வீட்டிலேயே சுலபமாக பெற முடியும்.
மேலும் படிக்க: உங்கள் தோட்டத்திற்கு அழகு சேர்க்கும் லில்லி மலர்கள்; இந்த வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக வளர்க்கலாம்
நீங்கள் வசிக்கும் இடம் சிறியதாக இருந்தாலும், சரியான பராமரிப்பு, மண் மற்றும் சூரிய ஒளி இருந்தால், கீரையை சிறப்பாக வளர்க்கலாம். தொடர்ந்து கவனம் செலுத்தி வழிமுறைகளை பின்பற்றினால் கீரைகள் நன்றாக வளரும். அதற்கான குறிப்புகளை தற்போது பார்க்கலாம்.
கீரை வளர்க்க குறைந்தது 6-8 அங்குல ஆழம் கொண்ட தொட்டியை தேர்வு செய்ய வேண்டும். அத்துடன், தொட்டியின் அடியில் நீரை வெளியேற்றக் கூடிய சரியான வடிகால் துளைகள் இருப்பது அவசியம். போதுமான ஆழம் இருந்தால் மட்டுமே வேர்கள் சுதந்திரமாக வளர முடியும். மேலும், நீர் தேங்காமல் இருப்பது வேர் அழுகலை தடுக்கும்.
கீரைச் செடிகள் வடிகட்டக் கூடிய, சத்துகள் நிறைந்த தொட்டி கலவையில் நன்றாக வளரும். மண்ணின் வளத்தை அதிகரிக்க, ஆர்கானிக் உரம் அல்லது மண்புழு உரம் சேர்ப்பது நல்லது. இது வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்கும். கனமான, கெட்டியாகக்கூடிய தோட்டத்து மண்ணை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
விதைகளை அரை அங்குல ஆழத்தில் மற்றும் 1-2 அங்குல இடைவெளியில் மண்ணில் விதைக்கவும். விதைகளை லேசாக மூடி மெதுவாக நீர் ஊற்றவும். இதனால் விதைகள் நீரில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கும். மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, விதைகள் சீராக முளைப்பதற்கும், உறுதியான நாற்றுகள் உருவாகுவதற்கும் உதவும்.
மேலும் படிக்க: மாடித் தோட்டம் வைத்திருப்பவரா நீங்கள்? இந்த காய்கறிகளை இப்போதே விதைத்து குளிர் காலத்தில் அறுவடை செய்யலாம்
கீரை ஆரோக்கியமாக வளர, ஒரு நாளைக்கு குறைந்தது 4 - 6 மணிநேர சூரிய ஒளி தேவை. வெப்பமான மாதங்களில், செடிகள் சீக்கிரமாக பூப்பதை தடுக்க நிழலில் வைக்கலாம். தொட்டிகளை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும்.
நாற்றுகள் 2 - 3 அங்குல உயரம் வளர்ந்தவுடன், அவற்றை 3 - 4 அங்குல இடைவெளி இருக்குமாறு நீக்கி, தனித்தனியாக பிரிக்கவும். நெருக்கமாக இருந்தால், ஊட்டச்சத்து மற்றும் சூரிய ஒளி சரியாக கிடைக்காது. இதனால் இலைகள் பலவீனமாகிவிடும். போதிய இடைவெளி கொடுப்பது காற்றோட்டத்தை அதிகரிக்கும். மேலும், பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதை குறைத்து, வலுவான ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும்.
ஒவ்வொரு 2 - 3 வாரங்களுக்கும் ஒருமுறை, மண்புழு உரம் அல்லது திரவக் கடற்பாசி உரம் போன்ற ஆர்கானிக் உரங்களை பயன்படுத்தி உங்கள் கீரைக்கு நீர் ஊற்றவும். ஆர்கானிக் முறையில் உரமிடுவது, அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குவதுடன், மண்ணின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. சுவையையும், மண்ணின் தரத்தையும் பாதிக்கக்கூடிய இரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இலைகள் 4 - 6 அங்குல நீளம் வளர்ந்தவுடன், வெளிப்புற இலைகளை முதலில் அறுவடை செய்யுங்கள். அடிக்கடி அறுவடை செய்வது, செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், சீக்கிரம் பூப்பதை தடுக்கும். தொடர்ந்து அறுவடை செய்வதால், சீசன் முழுவதும் உங்கள் சமையலுக்காக தொடர்ந்து கீரைகளை பெற்று மகிழலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com