herzindagi
image

Bigg Boss Tamil Sesaon 9 Contestants: இன்று முதல் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9; யார் யார் போட்டியாளர்கள்? முழு விபரம் இங்கே!

சீரியல் நடிகர் முதல் சாமானிய மக்கள் வரை கலந்துக் கொள்ள விருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிச்சயம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
Editorial
Updated:- 2025-10-05, 23:27 IST

தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முக்கியமானதாக விளங்கியது பிக்பாஸ். வெளிநாடுகள் மற்றும் வட மாநிலங்களில் பிரபலமாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பு செய்து வருகிறது. மக்களின் ஆதரவோடு பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கோலாகலமாக துவங்கியுள்ளது. சீரியல் நடிகர், பிரபல பட்டிமன்ற பேச்சாளர், யூடியூபர், சமூக ,போராளியான திருநங்கை போன்ற பலர் பங்கேற்கும் நிலையில், யார் யார் அவர்கள்? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.

 

 

 

 

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

சண்டைக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சம் இல்லாத பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக வாட்டர்லெமன் ஸ்டார் திவாகர் நுழைந்துள்ளார். பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான இவர் எப்படி? பிக்பாஸ் இல்லத்தில் நடந்துக் கொள்ளவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜே பார்வதி பிக்பாஸ் வீட்டில் களம் இறங்குகிறார். குக்கு வித் கோமாளி புகழ் மற்றும் காரக்குழம்பு என்று அறியப்படும் கனி, ராம்யா ஜூ, திரைப்பட தயாரிப்பாளர் மாலினி ஜீவரத்தினம், வினோத் பாபு, ஜனனி அசோக்குமார், அஸ்வினி ஆனந்திகா, வெளித்தோற்றத்தில் கொரியன் பையன் போன்று இருக்கும் துஷார் ஜெய பிரகாஷ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வேலைக்காரன் சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமான சபரி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

 

ரட்சகன் திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி, இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வென்றவரும் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் வரக்கூடிய கெமி, கானா இசை கலைஞர் வினோத் குமார், கடல் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு மக்களிடம் மிகவும் பிரபலமான தூத்துக்குடியைச் சேர்ந்த சுபிக்ஷா, சொந்த பிரச்சனையின் காரணமாக பல நாட்கள் அகோரியாக சுற்றித் திரிந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் சீசன் தமிழில் பங்கேற்கிறார்கள்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது?

அக்டோபர் 5 ஆம் தேதி மாலை 6 மணி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 யை விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். வழக்கம் போல வழக்கமான எபிசோடுகள் ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒளிப்பரப்பாகும். சீரியல் நடிகர் முதல் சாமானிய மக்கள் வரை கலந்துக் கொள்ள விருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிச்சயம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Image credit - Instagram 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com