herzindagi
chicken varuval recipe

Chicken Ghee Roast : நெய் மணக்க மணக்க சிக்கன் ரோஸ்ட், இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

எப்போதும் செய்யும் சிக்கன் குழம்பு, 65, வறுவலுக்கு பதிலாக இந்த மாதிரி சிக்கன் ரோஸ்ட் செய்து சாப்பிடுங்க. நெய்யின் மணத்துடன் இந்த ரெசிபி செம கலக்கலாக இருக்கும்…
Editorial
Updated:- 2023-07-18, 15:23 IST

பொதுவாக வீடுகளில் சிக்கன் செய்யும் பொழுது சிக்கன் குழம்பு அல்லது வறுவலை விட கடாயில் ஒட்டி இருக்கும் அந்த மசாலாவில் தான் நல்ல ருசி இருக்கும். ஒரு கைப்பிடி அளவு சாதத்தை இந்த மசாலாவுடன் சேர்த்து சாப்பிட்டால் போதும், அட அட அட இந்த கடாய் சாதத்தின் ருசியே தனி தான். வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை செய்யும் பொழுது, கடாய் சாதத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

இந்த ரெசிபி செய்வதற்கு நெய் மட்டுமே பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும். இருப்பினும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நெய் மட்டும் பயன்படுத்தலாம் அல்லது நெய் மற்றும் எண்ணெயின் கலவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊறவைத்த சிக்கன் உடன் ஃபிரெஷ் ஆக அரைத்த மசாலா கலவைகளை சேர்த்து நெய்யில் சமைக்கும் பொழுது, அதன் சுவையை பற்றி சொல்ல வேண்டுமா என்ன? இந்த அற்புதமான ரெசிபியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். சிக்கன் கீ ரோஸ்ட் தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: சைடு டிஷ் தேவை இல்லை, இப்படி ஹெல்த்தியா ஒரு வெஜிடபிள் சப்பாத்தி செஞ்சு அசத்துங்க!

 

தேவையான பொருட்கள் 

chicken roast recipes

  • சிக்கன் - 1 கிலோ 
  • எலுமிச்சை சாறு - 1
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
  • மிளகாய் போடி - 1 டீஸ்பூன் 
  • மஞ்சள் போடி - ¼ டீஸ்பூன் 
  • இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன் 
  • தண்ணீர் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 
  • கறிவேப்பில்லை - சிறிதளவு 
  • நெய் 3-4 டேபிள் ஸ்பூன் 

மசாலா அரைக்க 

  • காய்ந்த மிளகாய் 8-10
  • தனியா - 2 டேபிள் ஸ்பூன் 
  • சீரகம் - 1 டீஸ்பூன் 
  • சோம்பு - 1 டீஸ்பூன் 
  • மிளகு - 1 டீஸ்பூன் 
  • வெந்தயம் - ¼ டீஸ்பூன் 
  • பூண்டு 8-10
  • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு 

செய்முறை

chicken ghee roast

  • முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன், எலுமிச்சை சாறு, தயிர், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, வெந்தயம் மற்றும் புளி சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • சூடு குறைந்த பிறகு வறுத்து வைத்துள்ள மசாலாவுடன் பூண்டு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  •  இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடங்களுக்கு சமைக்க வேண்டும். சிக்கன் பாதி வெந்தால் போதுமானது.
  • பின்னர் வதங்கிய சிக்கன் துண்டுகளை எடுத்துவிட்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சமைக்க வேண்டும்.
  • மசாலாவுடன் சிக்கனை சேர்த்து சமைத்தால் சிக்கன் கடினமாக மாறிவிடும். எனவே சிக்கன் துண்டுகளை தனியே எடுத்து வைத்த பின் மசாலாக்களை சேர்த்து சமைக்கவும்.
  • மசாலா வற்றி நெய் பிரிந்து வரும் சமயத்தில் அரை வேக்காடாக வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து சமைக்கவும்.
  • மசாலாக்கள் எல்லாம் சிக்கனில் பிடித்து நெய் பிரிந்து வரும் சமயத்தில் கருவேப்பிலையை சேர்த்து பரிமாறலாம்.

இந்த அற்புதமான சிக்கன் ரெசிபியை நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: கொண்டக்கடலையை ஊறவைத்தால் போதும், வெறும் 20 நிமிஷத்தில் ஹெல்த்தியான லஞ்ச் செய்திடலாம்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com