இயற்கையாக நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு உணவு பொருளிலும் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால், அவை குறித்து நாம் முழுமையாக அறிவதில்லை. அந்த வகையில், சுண்டைக்காய் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
மேலும் படிக்க: மலச்சிக்கல் முதல் செரிமான பிரச்சனை வரை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிவி பழத்தின் நன்மைகள்
சுண்டைக்காயின் கசப்பு சுவை காரணமாக அதைத் தவிர்த்து விடுகிறோம். ஆனால், அந்த கசப்புக்கு பின்னால் ஒளிந்திருப்பது பல ஆரோக்கிய ரகசியங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை சுண்டைக்காய் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது. அந்த வகையில், சுண்டைக்காயின் நன்மைகள் குறித்து இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம். இதில் சுண்டைக்காயின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சுண்டைக்காயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவில் காணப்படும் வைட்டமின் சி, ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், இது உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதற்கும் உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, கண் பார்வை மற்றும் செல் வளர்ச்சிக்கு அவசியம் ஆகும். தையமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற பி வைட்டமின்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.
எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், இரத்த சோகையை தடுக்கும் இரும்பு, இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும் பொட்டாசியம் மற்றும் தசை இயக்கங்களுக்கு அவசியமான மெக்னீசியம் போன்ற தாதுக்களும் சுண்டைக்காயில் உள்ளன.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. இது மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும், இது குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு உணவாகி, ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை பராமரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ பூசணிக்காய் ஜூஸை இந்த நேரத்தில் குடிங்க
ஃப்ளேவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகள் சுண்டைக்காயில் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்கின்றன. இதனால், நாட்பட்ட நோய்கள் வரும் அபாயம் குறையலாம்.
சுண்டைக்காயில் உள்ள சில சேர்மங்களுக்கு வீக்கத்தை குறைக்கும் பண்புகள் உள்ளன. இவை செரிமான மண்டலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை குறைத்து, புண்களை தடுக்க உதவக் கூடும். மேலும், இதில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அல்லது நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கலாம்.
பாரம்பரிய மருத்துவத்தில் சுண்டைக்காய், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இவ்வளவு மருத்துவ பயன்கள் நிறைந்த சுண்டைக்காயை நம்முடைய அன்றாக உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com