Benefits of cashews: முந்திரி பருப்பு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் தனித்துவமான சுவை மற்றும் வளைந்த வடிவம் தான். ஆனால் இந்த சிறிய பருப்பு, சுவைக்கு மட்டுமல்ல, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும். முந்திரியின் தோற்றம், ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய பயன்கள் குறித்து காணலாம்.
மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 உணவுகள்; இவற்றை மிஸ் பண்ணாதீங்க மக்களே
முந்திரியை மரத்தில் இருந்து பெறுகிறோம். இந்தியா உட்பட பல்வேறு வெப்பமண்டல நாடுகளில் முந்திரி பயிர் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இதன் வடிவம் தனித்துவமானது. குறிப்பாக, சற்று வளைந்து சிறுநீரகம் போன்ற அமைப்பை கொண்டிருக்கும். இந்த பருப்பை நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
முந்திரியில் அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை உடலின் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. முந்திரியை தொடர்ந்து உட்கொள்வது, உடலில் ஏற்படும் அழற்சியை (Inflammation) குறைக்க பெரிதும் உதவுகிறது.
முந்திரியில் நல்ல கொழுப்புகள் உள்ளன. இவை ஆரோக்கியமானவை மற்றும் உடலுக்கு அத்தியாவசியமானவை. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகின்றன.
முந்திரியில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து, பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: இருதய ஆரோக்கியம் முதல் உடல் எடை பராமரிப்பு வரை; சிறுதானியங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு முந்திரி ஒரு சிறந்த சிற்றுண்டி ஆகும். மிதமான அளவில் முந்திரியை சாப்பிடுவது, சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காமல் நிர்வகிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லதாக முந்திரி கருதப்படுகிறது. ஆரோக்கியமான அளவு முந்திரியை தொடர்ந்து உட்கொள்வது காலப்போக்கில் கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த பங்களிக்கக்கூடும்.
முந்திரியை உங்கள் தினசரி உணவில் சரியான அளவில் சேர்ப்பது கண்பார்வைக்கு கூட நன்மை அளிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முந்திரியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. இவற்றை வறுத்து அல்லது வறுக்காமல் அப்படியே சாப்பிடலாம். மேலும், சாலட், ஸ்மூத்தி மற்றும் மில்க் ஷேக்குகள் போன்றவற்றில் சேர்த்தும் அருந்தலாம். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப எந்த அளவிற்கு முந்திரி எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவரிடம் ஆலோசனை செய்து சாப்பிடுவது நன்மை அளிக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com