herzindagi
chickpea pulao for lunch box

Healthy Lunch Box : கொண்டக்கடலையை ஊறவைத்தால் போதும், வெறும் 20 நிமிஷத்தில் ஹெல்த்தியான லஞ்ச் செய்திடலாம்!

லஞ்ச் பாக்ஸ் திறக்கும் போதே குஷி ஆகி விடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது போன்ற ஹெல்த்தியான ரெசிபியை செய்து கொடுங்கள்…
Editorial
Updated:- 2023-07-17, 19:07 IST

காலையில் லஞ்ச் பாக்ஸ் பேக் செய்வது சற்று கடினமான வேலை. சீக்கிரம் சமைக்கணும், பேக் செய்பவர்களுக்கு பிடித்ததாக இருக்கனும் அதே சமயம் ஹெல்த்தியாகவும் இருக்கனும். கவலை வேண்டாம். இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள சென்னா புலாவ் அல்லது வெள்ளை கொண்டைக்கடலை பிரியாணியை உங்கள் லஞ்ச் பாக்ஸ் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற ரெசிபியை லஞ்ச் பாக்ஸிற்கு கொடுத்து அனுப்பினால் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். 

வெள்ளை கொண்டைகடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இரவில் இந்த கொண்டக்கடலையை ஊற வைத்தால் போதும் காலையில் எழுந்தவுடன் வெறும் 20 நிமிடத்தில் இந்த சுவையான புலாவ் ரெசிபியை செய்திட முடியும். கொண்டைக்கடலை வேகும் சமயத்தில் தேவையான காய்கறிகளை நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். சுலபமாக செய்யக்கூடிய இந்த ஹெல்த்தியான வெள்ளை கொண்டை கடலை புலாவ் ரெசிபியின் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: தக்காளி தேவையில்லை! பாரம்பரிய சுவையில் சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு செய்து சாப்பிடுங்க!

 

தேவையான பொருட்கள் 

chick pea recipes

  • பட்டை - 1 சிறிய துண்டு 
  • ஏலக்காய் 2-3
  • பிரியாணி இலை - 1
  • சீரகம் - 1 டீஸ்பூன் 
  • சோம்பு - 1டீஸ்பூன் 
  • கொண்டக்கடலை - 1 கப் 
  • பாஸ்மதி அரிசி - 1 கப் 
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
  • வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் 3-5
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன் 
  • தக்காளி - 4 
  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் 
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
  • தனியா தூள் - 1 டீஸ்பூன் 
  • சென்னா மசாலா தூள் - 2 டீஸ்பூன் 
  • புதினா இலை -சிறிதளவு 
  • கொத்தமல்லி இலை -சிறிதளவு 
  • உப்பு -தேவையான அளவு 
  • தண்ணீர் 

செய்முறை 

chickpea pulao

  • சென்னா அல்லது வெள்ளை கொண்டக்கடலையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். 
  • இப்போது ஒரு குக்கரில் ஊறவைத்து கொண்டக்கடலை, உப்பு, மஞ்சள் தூள், பிரியாணி இலை, கிராம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5-7 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். 
  • இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். 
  • அடுத்ததாக நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.  
  • இதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். 
  • பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் தனியா தூள், சென்னா மசாலா சேர்த்து கலந்து விடவும். 
  • அடுத்ததாக வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். 
  • இதனுடன் நறுக்கிய புதினா கொத்தமல்லி இலைகள் மற்றும் 1.5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 
  • தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். 
  • குக்கரை மூடி ஆவி வரும் பொழுது விசில் போட்டு பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து சமைக்கவும். 
  • விசில் அடங்கிய பிறகு தயிர் பச்சடி உடன் பரிமாறலாம். 
  • சுவையான இந்த கொண்டைக்கடலை புலாவ் ரெசிபியை கட்டாயமாக நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். 

 

இந்த பதிவும் உதவலாம்: சைடு டிஷ் தேவை இல்லை, இப்படி ஹெல்த்தியா ஒரு வெஜிடபிள் சப்பாத்தி செஞ்சு அசத்துங்க! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com