
புரதம் என்பது தசைகளை உருவாக்கவும், திசுக்களை சீரமைக்கவும், நம் உடலை ஆற்றலுடன் பராமரிக்கவும் மிக அவசியம் ஆகும். உங்கள் அன்றாட உணவில் நீங்கள் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய புரதச்சத்து நிறைந்த சிலவற்றை காணலாம்.
மேலும் படிக்க: குளிர் காலத்தின் காலைப் பொழுதை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்றுவதற்கான எளிய குறிப்புகள்
பருப்பு வகைகள் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய, புரதம் மற்றும் நார்ச்சத்தால் நிரம்பிய தானியங்கள் ஆகும். இவை செரிமானத்திற்கு உதவுகின்றன, இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துகின்றன மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகின்றன. இவற்றை சூப்கள், குழம்புகள் அல்லது சாலட்களில் சேர்க்கலாம். இது தாவர அடிப்படையிலான புரதத்தால் ஆனது. எனவே, எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கும்.
முழுமையான புரதங்களால் ஆன உணவுகளில் முட்டை முதன்மையானது. மேலும், இதன் விலை குறைவாக இருப்பதால் அனைத்து தரப்பு மக்களாலும் இதனை எளிதாக வாங்கிக் கொள்ள முடியும். இதில் அமினோ அமிலங்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. மேலும், இது வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளையும் வழங்குகிறது. வேகவைத்தல், பொரியல் அல்லது ஆம்லெட் என பல வழிகளில் முட்டையை விரைவாக தயாரிக்கலாம்.

கொண்டைக்கடலையிலும் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. சுமார் 100 கிராம் கொண்டைக்கடலையில் 19 கிராம் புரதச்சத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கு உதவுகின்றன, இரத்த சர்க்கரையை நிலைப்படுத்துகின்றன மற்றும் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகின்றன. இதனை சிற்றுண்டியாக கூட எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
இதுவும் விலை மலிவான உணவு பொருளாகும். ஆனால், இதன் பயன்கள் ஏராளம். இதில் புரதம் மட்டுமின்றி ஆரோக்கியமான கொழுப்புகளும் நிறைந்துள்ளன. இதனை வறுத்து சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மக்னீசியம், அன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துகளும் இதில் காணப்படுகின்றன.

சுமார் 100 கிராம் சோயாவில் ஏறத்தாழ 50 கிராம் புரதம் இருப்பதாக அறியப்படுகிறது. அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். குழம்புகள், வறுவல் அல்லது சாலட்களில் இதனை சேர்த்து சாப்பிடலாம்.
முளைகட்டிய பயிறு வகைகளில் புரதச்சத்து நிரம்பியுள்ளது. இவை எளிதாக செரிமானம் ஆகக் கூடியவை. இதனை சமைக்காமல் அப்படியே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இவை, தாவர அடிப்படையிலான புரதத்தின் ஆற்றல் மையம் போன்றது.
இது போன்ற உணவுகளை நாள்தோறும் சாப்பிடுவதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியத்தை எளிதாக பராமரிக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com