herzindagi
image

Winter Care: குளிர்காலத்தில் இஞ்சிக்கு இவ்வளவு மவுசா? பயன்படுத்திப்பாருங்கள் இந்த பாதிப்பெல்லாம் இனி ஏற்படாது!

  குளிர்ந்த காற்று உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்றால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் அதிகம் நிறைந்த இஞ்சியைக் கட்டாயம் ஏதாவது ஒரு வகையில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-12-11, 22:42 IST


குளிர்காலம் வந்தாலே அதனுடன் பல்வேறு நோய் பாதிப்புகளும் உடன் சேர்ந்துவிடும். என்ன தான் குளிருக்கு இதமாக ஸ்வெட்டர், ஜர்கின், ஸ்கார்ப் போன்ற ஆடைகளை அணிந்தாலும் இந்த குளிர் அனைவரையும் சும்மாவிடாது. சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, ஜலதோசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிடக்கூடும். மற்ற பருவக்காலங்களை விட குளிர்காலங்களில் எப்போதும் உடலை ஆற்றலுடன் வைத்திருப்பது அவசியம். இந்த சூழலில் குளிர்காலங்களில் குளிரை இதமாக்குவதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்க இஞ்சி எப்படி பயன்படுகிறது? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே.

 

குளிர்காலத்தில் இஞ்சியைப் பயன்படுத்தும் முறை:

  • குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது செரிமான கோளாறு, குளிர் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் இஞ்சியை தேநீராகவோ? அல்லது இஞ்சி எலுமிச்சை கலந்த பானமாக குடிக்கலாம். இதில் உள்ள ஆக்டி ஆக்ஸிடன்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க இஞ்சியை உணவு முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: Foods for Liver Health: குளிர்காலத்தில் கல்லீரலில் இருந்து நச்சுகளை இயற்கையாக வெளியேற்ற உதவும் 5 உணவுகள் இதோ

  • குளிர்ந்த கால நிலை வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு உடல் வலி, தசை வலி, மூட்டு வலி போன்ற பல பாதிப்புகளைக் கட்டாயம் ஏற்படுத்தும். என்ன தான் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தினாலும் இதன் வலியைக் குறைக்க முடியாது. இதற்கு கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால், இஞ்சியைக் கசாயமாக உபயோகிக்கலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் வலிமைப் பெற உதவுகிறது.
  • குளிர்காலங்களில் உடலின் வெப்பநிலையை சூடாக வைத்திருக்க இஞ்சி சாறு அதிகம் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com