
இன்றைக்கு மாறிவரும் உணவுப்பழக்க வழக்கம், சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளாதது, காலை நேரத்தில் தூக்கம், நொறுக்குத் தீனிகள் அதிகம் சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. நம்முடைய உயரத்திற்கு அதிகமாக எடை இருக்கும் போது உடல் நம்முடைய செயல்பாட்டில் இருக்காது. வழக்கமாக செய்யக்கூடிய பணிகளையும் முறையாக செய்ய முடியாது. இதைத் தவிர்க்கும் வேண்டும் என்றால் உயரத்திற்கு ஏற்ப எடையை பராமரிக்க வேண்டும்.
தற்போது உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்வது போன்ற பல முயற்சிகளில் மக்கள் ஈடுபடுவது இயல்பாகி விட்டது. அனைவராலும் இந்த பழக்கங்களை மேற்கொள்ள முடியுமா? என்றால் நிச்சயம் கேள்விக்குறி தான். இதற்கு ஒரே தீர்வு உணவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவது. இதற்காக விலையுயர்ந்த தானியங்களைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதில்லை. உடல் எடையைக் குறைத்த கேப்பை அதாவது ராகியைப் பயன்படுத்தலாம். இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இன்றைய காலத்துக்குப் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கேப்பை கூழ் குடிப்பது பிடிக்காது. சிலருக்கு கூழ் எப்படி செய்வது என்பதே தெரியாது. இந்த நேரத்தில் கேப்பையை வைத்து சூப் செய்து பருகலாம். இதில் காய்கறிகள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு தேவையில்லாத கொழுப்புகளையும் குறைக்க உதவுகிறது. வீட்டிலேயே சுலபமாக செய்வதற்கு எப்படி ராகி சூப் செய்யலாம்? இதற்குத் தேவையான பொருட்கள் என்ன என்பது குறித்து முதலில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் சாப்பிடுங்க!
மேலும் படிக்க: Benefits of onion: தினசரி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் அதிசய பயன்கள்
மேலும் படிக்க: வீட்டில் 5 வயதில் குழந்தைகள் உள்ளார்களா? உடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகளெல்லாம் கொடுக்காதீர்கள்!
கேப்பை மாவில் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளதால் செரிமானத்தை சீராக்கி பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறைந்த கலோரிகள் மற்றும் புரத சத்துக்கள் உள்ளதால் தசைகளை உருவாக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. கால்சியம், இரும்புச் சத்துக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் எடை குறைப்பின் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெற்று உடலுக்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com