herzindagi
milk cake ingredients

செம டேஸ்டியான மில்க் கேக் ஸ்வீட் செய்முறை! 45 நிமிடங்களில் தயார்...

பால்கோவா செய்யத் தெரியுமா ? அதில் சின்ன மாற்றம் செய்தால் இந்த மில்க் கேக் எனும் கலாகண்ட் ஸ்வீட்டை ருசி பார்க்கலாம்...
Editorial
Updated:- 2024-08-20, 17:09 IST

குலாப் ஜாமுன், மைசூர் பாக் என இனிப்புகள் இருந்தாலும் பால் பயன்படுத்தி தயாரிக்கும் இனிப்பின் சுவை தனித்துவமானதாக இருக்கும். அந்த வகையில் வட மாநிலங்களில் பிரபலமான மில்க் கேக் எனும் கலாகண்ட் ஸ்வீட் செய்முறையை பார்க்கலாம். இதன் செய்முறை ஏறக்குறைய ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போல இருக்கும். சில மாற்றங்கள் மில்க் கேக்-ன் சுவையை அதிகப்படுத்தும். தீபாவளி உட்பட பல பண்டிகை நாட்களில் வீட்டிலேயே இந்த ஸ்வீட்டை கிலோ கணக்கில் தயாரிப்பார்கள். பால்கோவா செய்முறையில் பால் நன்றாக கொதிக்கவிடப்பட்டு கெட்டியான பக்குவத்திற்கு மாற்றப்படும். இதில் பால் கொதிக்கும் போது வினிகர் சேர்த்து மில்க் கேக் ஆக மாற்றப்படும். 

indian milk cake

மில்க் கேக் செய்யத் தேவையானவை

  • கொழுப்பு நிறைந்த பால் 
  • சர்க்கரை 
  • எலுமிச்சை சாறு அல்லது வினிகர்
  • ஏலக்காய் தூள்
  • நட்ஸ்

குறிப்பு

இதை செய்ய ஆரம்பிக்கும் முன்பாக பருப்பு வகைகளை போட்டு வைக்கும் பாத்திரத்தில் நெய் தடவுங்கள். மில்க் கேக்-ற்கு உரிய வடிவம் கிடைக்க இறுதியாக பாத்திரத்தில் மாற்றுவோம். அதே போல மிக்ஸ் செய்ய பயன்படுத்தும் கரண்டியிலும் கொஞ்சம் நெய் தடவிக் கொள்ளலாம்.

மேலும் படிங்க அளவில்லா சுவைக்கு வாழை இலை அல்வா! இப்படி செஞ்சு பாருங்க...

மில்க் கேக் செய்முறை

  • கடாயில் ஒன்றரை லிட்டர் பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். மிதமான தீயில் இதன் செய்முறை தொடரட்டும்.
  • கொதி வந்த பிறகு பத்து நிமிடம் கழித்து வினிகர் சேர்க்க வேண்டும். வினிகர் பயன்படுவதாக இருந்தால் மூன்று ஸ்பூன் ஊற்றவும். எலுமிச்சை சாறு சேர்ப்பதாக இருந்தால் நெல்லிக்காய் சைஸ் எலுமிச்சை பழத்தின் பாதியளவு சாறு ஊற்றவும்.
  • ஒரே நேரத்தில் ஊற்றினால் உடனடியாக திரிந்து போகும். எனவே கொஞ்சம் கொஞ்மாக ஊற்றவும்.
  • இந்த ஸ்வீட்டை செய்து முடிப்பதற்கு குறைந்தது 45 நிமிடம் எடுக்கும்.
  • கரண்டு கொண்டு பாலை மிக்ஸ் கலந்து விட்டு கொண்டே இருக்கவும்.
  • நன்கு கெட்டியான பிறகு 200 கிராம் சர்க்கரை சேருங்கள். இப்போது சர்க்கரை கரைந்து மீண்டும் ஸ்வீட் திரவமாக தெரியும். 
  • தொடர்ந்து கலந்துவிட்டு கொண்டே இருக்கவும். பால்கோவாவின் பக்குவதற்கு வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும். 
  • இறுதிக்கட்டத்தில் தீயை கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். லைட் பிரவுன் நிறம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுத்து பாத்திரத்திற்கு மாற்றவும்.
  • இதை மூடிவிட்டு எட்டு மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடுங்கள். ஸ்வீட் பார்ப்பதற்கு மேலே கெட்டியாகவும் உள்ளே பஞ்சு போலவும் இருக்கும்.
  • இதை நீங்கள் கடைகளில் பார்க்கும் சைஸிற்கு வெட்டி நட்ஸ் போட்டு நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடுங்கள்.

மேலும் படிங்க 5 நிமிடம்... சூப்பரான சுவையான கேரளா சம்மந்தி ரெடி பண்ணலாம்!

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com