அளவில்லா சுவைக்கு வாழை இலை அல்வா! இப்படி செஞ்சு பாருங்க...

பல விதமான அல்வா-க்களில்  வாழை இலை அல்வா முற்றிலும் வித்தியாசமானது. சுவையோ கடலின் ஆழத்தை போன்றது. 

banana leaf halwa sweet

மா, பலா, வாழை இந்த மூன்றில் எது அதிக நன்மைகளை கொண்டது என கேட்டால் அதற்கு சற்றும் தாமதிக்காமல் வாழை என பதிலளிக்கலாம். ஏனென்றால் வாழை மரத்தின் தண்டு, இலை, பழம், பூ ஆகியவற்றை சாப்பிட முடியும். வாழையை தவிர்த்து வேறு எந்த மரத்திற்கும் இது சாத்தியப்படாது. வாழை இலையை சாப்பிட முடியுமா என நீங்கள் கேட்கலாம். ஆம்... வாழை இலையை கொண்டு அல்வாவே செய்யலாம். பலவிதமான அல்வாவை வாங்கி சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த அல்வா ஆரோக்கியம் நிறைந்தது. ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்முறை பகுதியில் வாழை இலை அவ்லா எப்படி செய்வது என்று பார்க்கலாம்....

perfect banana leaf halwa recipe

வாழை இலை அல்வா செய்யத் தேவையானவை

  • வாழை இலை
  • தண்ணீர்
  • சர்க்கரை
  • முந்திரி
  • நெய்
  • உலர் திராட்சை
  • சோள மாவு

குறிப்பு

வாழை இலையில் பழுத்த மஞ்சள் பகுதிகளை நீக்கி பச்சையாக இருக்கும் பகுதிகளை பயன்படுத்தவும்.

வாழை இலை அல்வா செய்முறை

  • முதலில் வாழை இலையின் பச்சை பகுதிகளை காய்கறி வெட்டுவது போல வெட்டி தண்ணீரில் நன்கு கழுவவும்.
  • இதை மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். அடுத்ததாக வடிகட்டி மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • நிறமி சேர்க்காமலேயே வாழை இலை அல்வா பச்சை பசேலென வரும். இதன் பிறகு ஒரு கப் சோள மாவு சேர்த்து கட்டி உருவாகாதபடி கலக்கவும்.
  • நீங்கள் விரும்பினால் இதே அளவிற்கு அரிசி மாவு அல்லது மைதா மாவு சேர்க்கலாம். அடுத்ததாக ஒரு கப் சர்க்கரை சேர்க்கவும். இதுவே வாழை இலை அல்வாவின் சரியான அளவு.
  • கடாயில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அது உருகிய பிறகு 20 முந்திரி, 25 கிராம் உலர் திராட்சை போட்டு வறுக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
  • அதே கடாயில் கலந்து வைத்திருக்கும் வாழை இலைச் சாறு ஊற்றி மிதமான தீயில் கலந்து விட்டு கொண்டே இருக்கவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் ஒரு சிட்டிகை உப்பு சேருங்கள். வாழை இலையின் பச்சை வாசனையை குறைப்பத்ற்கு கொஞ்சம் ஏலக்காய் தூள் போடுங்கள்.
  • கவனமாக கலந்து விட்டு கொண்டே இருந்தால் அல்வா பதம் வந்துவிடும்.
  • இப்போது வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும். அனைத்தும் நன்றாக சேர்ந்து திரண்டு வருவதற்கு இன்னும் மூன்று நிமிடங்கள் கலந்து விடவும்.
  • சுவையான வாழை இலை அல்வா ரெடி...

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP