
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் நீண்ட காலம் வாழவும் விரும்பினால், உடற்பயிற்சியைத் தவறவிடக்கூடாது. இருப்பினும், நேரமின்மை காரணமாக உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால், கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய நேரம் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல, மேலும் ஜிம்மிற்குச் செல்வது இன்னும் சவாலானதாக இருக்ககூடும்.
உடற்பயிற்சி என்பது எடையைக் குறைப்பது மட்டுமல்ல. தினசரி உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்க செய்கிறது, உங்கள் ஆயுளையும் அதிகரிக்கிறது. முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொரு நாளும் உங்கள் பரபரப்பான அட்டவணையில் 45-50 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். இதனால் உடற்பயிற்சி செய்ய கடினமாக சிலர் நினைக்கிறார்கள். அதனால்தான் நீங்கள் உடற்பயிற்சி செய்யாமலேயே அதன் நன்மைகளைப் பெறலாம், மேலும் நீண்ட நேரம் வியர்வை சிந்த வேண்டிய அவசியமில்லை.
மேலும் படிக்க: கொழுப்பு அதிகம் படிந்த கைகளை பார்க்க அசிங்கமாக இருந்தால் இந்த ஆசனத்தை முயற்சிக்கவும்
உடற்பயிற்சியை விட முக்கியமானது, நீங்கள் உங்கள் உடற்பயிற்சியை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் குறுகிய நேரம் செய்யும் உடற்பயிற்சிகளையும், பின்னர் எளிதான பயிற்சிகளையும் செய்யும்போது, உடல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள போதுமான ஓய்வு பெறுவதால் அதிக நன்மைகளைப் பெறுகிறது. பகலில் சில குறுகிய உடற்பயிற்சிகள் செய்வது, நீங்கள் 45 நிமிடம் ஓடும் பயிற்சியை விட சிறந்ததாக இருக்கும். அதிக நேரம் செய்யும் பயிற்சிகளால் உங்கள் வேகத்தை இழக்க நேரிடும். இதனால் நாள் முழுவதும் உடல் வலியுடன் இருப்பது போல் உணர்வீர்கள். இதுவே குறுகிய பயிற்கள் உங்களை சோர்வடைய செய்யாது. இதனால் உடல் சுறுசுறுப்பாக செயல்ப்பட உதவுகிறது. உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் இரண்டு பயிற்சிகளை பார்க்கலாம்.

படிக்கட்டுகளில் ஏறுதல் ஒரு சிறந்த பயிற்சியாகும், இது வீட்டிலோ அல்லது வேலையிலோ எளிதாக செய்யலாம். நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும் போதெல்லாம், லிஃப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்து செல்லுங்கள். உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை என்று நினைத்தால், ஒரு நிமிடத்திற்குள் முடிந்தவரை உயரத்திற்கு குதிக்க முயற்சிக்கவும். இந்தப் பயிற்சியைச் செய்வது இளம் வயதிலேயே இறக்கும் அபாயத்தைக் குறைக்கும். படிக்கட்டு ஏறுதலில் முக்கிய நன்மைகள் என்னவென்றால் தமது இதயத் துடிப்பை வேகப்படுத்தி சுவாசிப்பதையும் வேகப்படுத்தும், இதனால் உடலுக்கு ஆக்ஸிஜன் உட்கொள்ளால் அதிகரிக்க செய்யும், ஜாகிங் பயிற்சியில் இதை செய்ய பல மணி நேரம் எடுக்கலாம். அதேபோல் படிகள் ஏறுவதால் கலோரிகளை எளிதாக எரிக்க முடியும், இதனால் உங்கள் எடையை குறைக்க முடியும். ஜாங்கி செய்வதை விட படிக்கட்டுகளில் ஏறுவது மூன்று மடங்கு வேகமாக கலோரிகளை எரிக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது.
படிகளில் ஏறுவதால் உடலில் இருக்கும் முக்கிய தசைகள் வலுவடைகிறது. குறிப்பாக கால் தசைகள், தொடை எலும்புகள் குவாட் தசைகள் மற்றும் பிட்டம் ஆகியவை வலுவடைய செய்கிறது. உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் அடிக்கடி படிக்கட்டுகளை பயன்படுத்தும்போது கால்கள் வலிமை பெறுகிறது. இதற்காக நீங்கள் நீண்ட நேரம் ஓடி இந்த தசைகளை வலிமை பெற செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேலை நேரத்தில் படிகளை பயன்படுத்து பல பெறாலம்.

உங்களால் தினமும் சிறிது நேரம் ஒதுக்க முடிந்தால், வீட்டில் இருந்து கொண்டே ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம். இது ஒரு விரைவான வார்ம்-அப் பயிற்சியாக இருக்கும், பின்னர் 20 வினாடிகள் முடிந்தவரை வேகமாகத் குதிக்கலாம். ஒரு இடைவெளி எடுத்து இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்யலாம். இப்படி செய்வதால் சிறந்த பலனை பெறுவீர்கள். ஸ்கிப்பிங் செய்வதால் உடல் முழுவதும் உள்ள பல்வேறு தசைகளை வலிமைப்படுத்துகிறது. கயிற்றை பயன்படுத்தும் கைகளுக்கு வலு சேர்க்கிறது. உடலளவிலும்,மனதளவிலும் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை பராமரிக்க உதவுகிறது. நமக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை போக்க உதவுகிறது. ஸ்கிப்பிங் மனதிற்கு வலிமையை தரக்கூடியது. எடை குறைக்க விரும்பினால் ஸ்கிப்பிங் செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். இது ஓடுவதை விட வேகமாக கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீங்கள் செய்யும் 15 நிமிட பயிற்சி சுமார் 200 முதல் 300 கலோரிகளை எரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க: 60 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இந்த 2 உடற்பயிற்சிகளை முயற்சிக்கவும்
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com