herzindagi
kerala chammanthi recipe

5 நிமிடம்... சூப்பரான சுவையான கேரளா சம்மந்தி ரெடி பண்ணலாம்!

ஐந்து நிமிடங்கள் இருந்தால் போதும்... கேரளா ஸ்டைலில் சூப்பரான தேங்காய் சம்மந்தி செய்யலாம்... தேங்காய் துவையல் போல் தெரிந்தாலும் இதன் சுவை வித்தியாசமானது.
Editorial
Updated:- 2024-08-12, 11:06 IST

சம்மந்தி என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான தேங்காய் சட்னி அல்லது துவையல் ஆகும். இது ப்ரெஷ் ஆன தேங்காயை கொண்டு செய்யப்படுகிறது. இதற்கு சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய், உப்பு, புளி போன்ற பொருட்கள் தேவை. கேரளாவில் இதை தேங்காய் சம்மந்தி அல்லது சம்மந்தி பொடி என அழைக்கின்றனர். கேரள மக்கள் சம்மந்தியை சிவப்பு அரிசியோடு பிரட்டி சாப்பிடுகின்றனர். நாம் இட்லி, தோசையோடு தொட்டு சாப்பிடும் சட்னி என புரிந்துகொள்ளலாம். ஆனால் சம்மந்தியை தண்ணீர் ஊற்றாமலும், மிக்ஸியில் முழுமையாக அரைக்காமலும் செய்ய வேண்டும். ஏனெனில் இது நெடுந்தூர பயணங்களுக்கு வாழை இலையில் கட்டித் தரப்படுகிறது. தக்காளி சாதம், லெமன் சாதம் போல மதிய வேளை உணவாக சாதத்துடன் சம்மந்தியை பிசைந்து சாப்பிடுகின்றனர். தண்ணீர் இன்றி செய்வதால் சம்மந்தி கெட்டுப் போகாது.

thenga chammanthi recipe

சிலர் சம்மந்தி செய்ய பச்சை மிளகாய் பயன்படுத்துவர். இது சம்மந்தியை கூடுதல் காரம் ஆக்கும். வேறு சிலர் நிறத்திற்காக காஷ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவர். சம்மந்தியை நாம் சாதம், கஞ்சி, இட்லி, தோசையோடு சேர்த்து சாப்பிடலாம்.

சம்மந்தி செய்யத் தேவையானவை

  • தேங்காய் 
  • வர மிளகாய்
  • சின்ன வெங்காயம்
  • காஷ்மீரி மிளகாய் தூள்
  • உப்பு 
  • புளி கறிவேப்பிலை
  • சின்ன வெங்காயம்
  • இஞ்சி

சம்மந்தி செய்முறை

  • ப்ரெஷ் ஆன தேங்காயை உடைத்து அரை மூடி அளவிற்கு துருவிக் கொள்ளவும். உங்களிடம் பதப்படுத்தப்பட்ட தேங்காய் இருந்தால் அரை மணி நேரத்திற்கு முன்பாக ப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்து அதன் பிறகு பயன்படுத்தவும்.
  • பாதி வேலை முடிந்துவிட்டது. அடுத்ததாக மிக்ஸியில் அரை மூடி தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், ஏழு வர மிளகாய், தேவையான அளவு உப்பு, நெல்லிக்காய் சைஸில் பாதி புளி, 25 கிராம் இஞ்சி, கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு அரைக்கவும்.
  • நிறத்தை கூட்டுவதற்கு நீங்கள் ஐந்து வர மிளகாயும், கால் டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் போட்டு செய்முறையை மாற்றுங்கள். மிளகாய் தூள் சிறிது நேரத்திற்கு  பச்சை வாசனையைத் தரும்.
  • பச்சை மிளகாய் பயன்படுத்துவதாக இருந்தால் ஏழு வர மிளகாய் போடாமல் இரண்டு பச்சை மிளகாய் போடுங்கள். அதற்கு மேல் பயன்படுத்தினால் காரம் அதிகமாகி விடும்.

மேலும் படிங்க ஆந்திரா ஸ்டைலில் சுவையான முட்டை குழம்பு!

அரைக்கும் முறை

நீங்கள் இதை சட்னியை போல் தண்ணீர் ஊற்றி ஒரே தடவை மிக்ஸியில் 30 விநாடிகளுக்கு அரைக்க கூடாது. நாம் தண்ணீர் ஊற்றாமல் மூன்று விநாடிகளுக்கு ஒரு முறை விட்டு விட்டு அரைக்க வேண்டும். அனைத்தும் அரைக்கப்படுவதற்கு மிக்ஸியை திறக்கும் போது ஸ்பூனை வைத்து எடுத்து விடுங்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு Her Zindagi கிளிக் செய்யவும். 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com