பாரம்பரிய உணவுகள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்ட நம் முன்னோர்களுக்கு வெயிலில் வயலில் இறங்கி வேலை செய்வதற்கான ஆற்றலும், குச்சி ஊன்றிய நாட்களில் கூட சுயமாக சம்பாதித்து வாழக்கூடிய பலமும் பரிசாக கிடைத்தது. ஆனால் இன்றோ இளம் வயதிலேயே சர்க்கரை நோய், மாறாடைப்பு போன்ற பல உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. வாழக்கை முறை மாற்றம், உடற்பயிற்சி போன்ற மாற்றங்களுடன் நம் பாரம்பரிய உணவுகளையும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். வாரத்தில் 1-2 நாட்களாவது சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட முயற்சி செய்வோம்.
ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு பல்லாயிர கணக்கான உணவுகளை தயாரிக்கலாம். இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம். அந்த வகையில் 3 சுவையான சிறுதானிய ரெசிபிக்களை இப்போது பார்க்கலாம்.
ராகி தோசை
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 1 கப்
- ரவை - 1 கப்
- அரிசி மாவு - ½ கப்
- தயிர் -½ கப்
- இஞ்சி - சிறிய துண்டு
- பச்சை மிளகாய் -1
- கறிவேப்பிலை 5-6
- கொத்தமல்லி இலைகள் -சிறிதளவு
- வெங்காயம் -1
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 3½ கப்
செய்முறை
- முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் ராகி மாவு, ரவை மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.
- இதனுடன் தயிர் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் சேர்க்கவும். பிறகு சீரகம், கருப்பு மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கவும்.
- தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
- தயார் செய்து வைத்துள்ள மாவை 15-20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- 20 நிமிடங்கள் கழித்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- பிறகு தோசை கல்லை சூடு செய்து தோசைகளை சுட்டெடுக்கலாம். தோசை வேகும் போது அதனை சுற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றினால் தோசை மொறுகளாக வரும்.
- இதை சாம்பார், தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.
கம்பு கஞ்சி
தேவையான பொருட்கள்
- ஊறவைத்த கம்பு -1 கப்
- ஊறவைத்த பாசி பருப்பு - 1/2 கப்
- நெய் - 1 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கிராம்பு 2
- துருவிய இஞ்சி - 1½ டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
- ஊறவைத்த கம்பின் நீரை வடித்த பின்னர், அதை ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளலாம்.
- இப்போது ஒரு பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடானவுடன் சீரகம், கிராம்பு, இஞ்சி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- இதனுடன் கம்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து, நன்கு கலந்து 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- வதக்கிய கலவையில் 4 கப் தண்ணீர் ஊற்றி, கொதி வரும் போது குக்கரை மூடிவும். 4-5 விசில் விட்டு கஞ்சியை வேகவைக்கவும். பரிமாறும் போது நெய் சேர்த்தால் கூடுதல் ருசியுடன் இருக்கும்.
ராகி லட்டு
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 1/4 கப்
- பொடித்த வெல்லம் - 1/4 கப்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- உப்பு - 1 சிட்டிகை
இந்த பதிவும் உதவலாம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 கஷாயங்கள்
செய்முறை
- முதலில், ஒரு கடாயில் ராகி மாவை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வறுக்கவும், பின் இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.
- இதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, துருவிய தேங்காய் சேர்த்து புட்டு மாவு போல் 20 நிமிடம் ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.
- பின் வெந்த மாவை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
- அடுத்ததாக இதில் பொடித்த வெல்லம் மற்றும் நெய் சேர்த்து கலக்கவும்.
- கைகளில் சிறிதளவு நெய் தடவி, அதிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து உருண்டையாக உருட்டவும். நீங்கள் விரும்பினால் இதில் முந்திரியும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நான் வீட்டிலேயே முருங்கை இலைப்பொடியை தயாரிப்பது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation