herzindagi
boost immunity drink

Herbal Drinks to Boost immunity in Tamil: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 கஷாயங்கள்

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே கஷாயம் செய்து குடிக்கலாம். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-02-06, 12:00 IST

பருவநிலை மாற்றத்தின் போது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையலாம். வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் தொற்று நோய்களை தடுக்கிறது. சளி தொந்தரவுகளை எதிர்கொள்ளவும், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சுலபமான முறையில் கஷாயம் செய்து குடிக்கலாம். இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இயற்கை மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து கஷாயம் தயாரிக்கப்படுகிறது. பல தொற்று நோய்களை தடுக்கவும், உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் கஷாயம் ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது. இந்த வகையில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நான்கு கஷாயம் ரெசிபிக்களை இப்போது பார்க்கலாம்.

ஓமம் மிளகு கஷாயம்

kashyam

தேவையான பொருட்கள்

  • மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஓமம் - டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை பழம் - 1
  • தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் ஓமத்தை சேர்க்கவும்.
  • தண்ணீர் பாதியாக வற்றியவுடம் அடுப்பை அணைக்கவும்.
  • சூடு தணிந்த பின் இதில் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கஷாயத்தை தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

ஏலக்காய், ஓமம் & இலவங்கப்பட்டை கஷாயம்

தேவையான பொருட்கள்

  • ஓமம் - 1 டீஸ்பூன்
  • கருப்பு ஏலக்காய் - 1
  • இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு
  • தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் ஓமம், கருப்பு ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • இதில் இனிப்பு சுவைக்காக 1 டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கலாம்.
  • இந்த கஷாயத்தில் தேவைப்பட்டால் இஞ்சியும் சேர்த்து கொள்ளலாம்.

இஞ்சி, இலவங்கப்பட்டை & தேன் கஷாயம்

kashyam

தேவையான பொருட்கள்

  • ஏலக்காய் - 1
  • மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • சுக்கு தூள் -1 டேபிள் ஸ்பூன்
  • இலவங்கப்பட்டை - 1 துண்டு
  • தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  • கொதிக்கும் நீரில் ஏலக்காய், இலவங்கப்பட்டை, சுக்கு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இதனை வடிகட்டி, கொஞ்சம் ஆறிய பிறகு தேன் கலந்து குடிக்கலாம்.

இஞ்சி, துளசி & மஞ்சள் கஷாயம்

kashyam

தேவையான பொருட்கள்

  • துளசி இலைகள் 4-5
  • சுக்கு தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

(துளசிக்கு பதிலாக புதினா இலைகளையும் பயன்படுத்தலாம்)

இந்த பதிவும் உதவலாம்: காரசாரமான மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.
  • சூடு தணிந்த பின், நீங்கள் விரும்பினால் இதில் தேன் சேர்த்து குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நான் வீட்டிலேயே முருங்கை இலைப்பொடியை தயாரிப்பது எப்படி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com