முடி உதிர்வா? கவலை வேண்டாம், உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சூப்பர் உணவுகள்!

முடி உதிர்வால் அவதிப்படுபவர்கள் எல்லோரும் தினமும் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இவை நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
image
image

முடி உதிர்வு என்பது இப்போது மிகவும் பொதுவான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் என பல காரணங்கள் முடி உதிர்வுக்கு கூறப்படுகிறது. ஆனால், முக்கியமாக நாம் ஒன்றை உணர வேண்டும்.

முடி உதிர்வு பிரச்சனையை போக்குவதற்கு முதன்மையான தீர்வாக அமைவது ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் தான். எவ்வளவு விலை உயர்ந்த ஷாம்பூ, சீரம் போன்றவற்றை பயன்படுத்தினாலும், உங்கள் உடலில் சரியான ஊட்டச்சத்துகள் நிறைந்திருந்தால் மட்டுமே இதற்கு சரியான தீர்வை காண முடியும். மருத்துவர்கள் தொடங்கி, அழகுக் கலை வல்லுநர்கள் வரை இதனை தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

முட்டை:

இதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. விலை குறைவானதாக இருந்தாலும் முட்டையில் இருந்து நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளமாக உள்ளன. முடி வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான புரதம் மற்றும் பயோடின் ஆகியவை முட்டையில் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் முட்டையை நமது தினசரி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் முடி வளர்ச்சி மட்டுமின்றி தசையின் ஆரோக்கியம் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

Eggs

கீரை:

கீரை வகைகள் பார்ப்பதற்கு மிக எளிமையானதாக காணப்பட்டாலும், இவற்றில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இதன் காரணமாக தினமும் ஏதேனும் ஒரு கீரை வகையை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை கீரையில் உள்ளன. இவை முடி வளர்ச்சியை தூண்ட பெரிதும் உதவுகின்றன.

சர்க்கரைவள்ளி கிழங்கு:

இந்த பட்டியலில் மிகவும் சுவையான உணவாக விளங்குவது சர்க்கரைவள்ளி கிழங்காக இருக்கும். சைவ உணவு உண்பவர்கள் மட்டுமல்லாமல் அசைவ உணவுகள் மீது விருப்பம் கொண்டவர்களுக்கும் இதனை மிகவும் பிடிக்கும். ஏனெனில், தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், தசைக்கு வலு சேர்க்கும் பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் சர்க்கரைவள்ளி கிழங்கை அதிகமாக சாப்பிடுவார்கள். இதில் இருக்கும் பீட்டா - கரோடீன் முடியின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

மேலும் படிக்க: இரவில் தலைக்கு குளிப்பவரா நீங்கள்? உஷார் மக்களே... இந்த பாதிப்புகள் ஏற்படலாம்!

விதைகள்:

மற்ற உணவுகளை ஒப்பிடும் போது இவை சற்று விலை அதிகமானதாக இருக்கும். பிரதான உணவாக விதை வகைகளை எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், சத்து மிகுந்த சிற்றுண்டியாக இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். பாதாம், வால்நட், பிஸ்தா, பூசணி விதைகள் போன்றவற்றில் ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்டமின் ஈ போன்றவை உள்ளன. இவை முடியை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரச் செய்கின்றன.

பருப்பு வகைகள்:

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு பருப்பு வகைகளை ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். இதில் இருந்து ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் புரதம் ஆகியவற்றை பெற முடியும். இந்தச் சத்துகள் அனைத்தும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன.

அவகெடோ பழங்கள்:

இதனை தமிழில் வெண்ணெய் பழங்கள் என்று கூறுவார்கள். மற்ற பழங்களை விட இதன் சுவை சற்று வித்தியாசமாக இருந்தாலும், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இதில் உள்ளன. எனவே, இவை நம்முடைய கூந்தல் உதிர்வதை தடுத்து அதனை ஈரப்படத்துடன் வைத்திருக்க உதவுகின்றன.

Avacado

பெர்ரி வகை பழங்கள்:

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகிய பழங்களில் அன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. இவை அனைத்தும் கொலஜன் உற்பத்திக்கு வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP