தாவர வகையைச் சேர்ந்த முருங்கை இலை பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டிருல் இருந்து வருகிறது. இது கொத்தமல்லி மற்றும் வெந்தயக்கீரை போல சமையலில் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆயுர் வேத மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஒரு தாவரத்தில் பல நன்மைகள் அடங்கியுள்ளன.
இந்த தாவரம் முருங்கை மரம் எனவும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அள்ளித்தரும் இந்த முருங்கை இலையின் பண்புகள் பற்றி விரிவாகப் பார்ப்போம் வாருங்கள். இதனுடன் இந்த பதிவில் முருங்கை இலைப்பொடி தயாரிக்கும் முறையையும் கற்றுக்கொள்வோம்.
அனைத்து பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் இந்த முருங்கை மரம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் முருங்கை மரத்தைப் பார்க்கலாம். இது மிகவும் உயரமாக வளரக்கூடியது. அதே நேரம் இதை வீட்டு தொட்டியிலும் நட்டு வைக்கலாம். முருங்கை மரத்தில் இருக்கும் முருங்கை இலையில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
முருங்கை இலையை உட்கொள்வது புற்றுநோய் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்லது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நம் எலும்புகளைப் பலப்படுத்த உதவுகின்றன. முருங்கை இலை முடக்குவாதத்திற்கு நல்லது. இதுனுடன் பல நன்மைகள் முருங்கை இலையில் கொட்டி கிடக்கின்றன. எனவே இதை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: ஹோட்டல் ஸ்டைலில் சுவையான, ஊட்டச்சத்துமிக்க காளான் பூண்டு கறி செய்வது எப்படி?
மற்ற பொடிகளைத் தயார் செய்வது போலவே முருங்கை இலைப்பொடி தயார் செய்வதும் மிக மிக சுலபம். முருங்கை இலையிலிருந்து முருங்கை இலைப்பொடி தயாரிக்கும் முறை பின்வருமாறு.
இந்த பதிவும் உதவலாம்: சத்தான சுவைமிக்க ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி?
வீட்டிலேயே எளிமையாக முருங்கை இலைப்பொடி தயாரிக்கும் முறை நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com