கடலை மாவு, சர்க்கரை இருந்தால் முருகருக்கு பிடித்தமான திருபாகம் ஸ்வீட் தயாரிக்கலாம்

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா... முருகப்பெருமானுக்கு பிடித்த திருபாகம் ஸ்வீட் செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

thirupagam sweet for murugan

திருநெல்வேலியில் அல்வாவிற்கு அடுத்தப்படியாக பிரபலமான ஸ்வீட்களில் ஒன்றாக திருபாகம் உள்ளது. இது முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு பதார்த்தம். திருசெந்தூர் முருகன் கோவிலில் சாமி பிரசாதமாக பக்தர்களுக்கு திருபாகம் வழங்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது நெல்லை மக்கள் தயாரிக்கும் பாரம்பரிய ஸ்வீட் இந்த திருபாகம். தயாரிக்கும் போது கேசரி அல்லது மைசூர் பாக் போல தெரியும். கடலை மாவு, சர்க்கரை, முந்திரி பவுடர் இருந்தால் அரை மணி நேரத்தில் இந்த இனிப்பை தயாரித்துவிடலாம். நீங்கள் முருக பக்தராக இருந்தால் கட்டாயம் செய்து பாருங்கள்.

thirupagam sweet ingredients

திருபாகம் செய்யத் தேவையானவை

  • கடலை மாவு
  • சர்க்கரை
  • நெய்
  • குங்குமப் பூ
  • முந்திரி பருப்பு பவுடர்
  • பால்

குறிப்பு :

இதில் பயன்படுத்தும் அளவு டம்ளரில் குறிப்பிடப்படுகிறது. நீங்கள் எந்த டம்ளர் பயன்படுத்தினாலும் அதே அளவை இறுதி வரை தொடருங்கள்.

திருபாகம் செய்முறை

  • ஒரு டம்ளர் கடலை மாவை சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் அடி பிடிக்காத பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றாமல் இந்த கடலை மாவை போட்டு வறுக்கவும்.
  • கடலை மாவின் நிறம் மாறாமல் பச்சை வாடை போகும் வரை வறுக்கவும். கடலை மாவு நிறம் மாறினால் இறுதியாக ஸ்வீட் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • இரண்டு நிமிடங்களுக்கு கடலை மாவை ஆறவிட்டு காய்ச்சி ஆர வைத்த பால் இரண்டு டம்ளர் சேருங்கள்.
  • விஸ்க் வைத்து கடலை மாவை நன்கு அடிக்கவும். அடுத்ததாக அடுப்பை மிதமான தீயில் வைத்து கடலை மாவு, பால் ஆகியவற்றை கிளறி கொண்டே இருங்கள்.
  • பேஸ்ட் போல கெட்டியான பிறகு ஒன்றரை டம்ளர் சர்க்கரை சேர்த்து கலந்து விடுங்கள்.
  • இனிப்பில் நெய் மொத்தமாக சேர்க்காமல் பகுதி பகுதியாக ஊற்ற வேண்டும். கடலை மாவு கிளறும் போது பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டால் அதை கரண்டியில் எடுத்துவிடுங்கள்.
  • பத்து குங்குமப் பூவை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் போட்டு அரை மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள். இதை கடலை மாவில் போடுங்கள்.
  • இப்போது முதல் முறையாக கால் டம்ளர் நெய் ஊற்றுங்கள். நெய் நன்கு உறிஞ்சப்பட்ட பிறகே அடுத்த நெய் ஊற்ற வேண்டும்.
  • அடுத்ததாக ஒரு டம்ளர் முந்திரி பருப்பு பவுடரை கடலை மாவில் போடவும். விஸ்க் வைத்து கலப்பதை நிறுத்த வேண்டாம்.
  • இரண்டாவது முறையாக கால் டம்ளர் நெய் ஊற்றுங்கள். பார்ப்பதற்கு மஞ்சள் நிற கேசரி போல தெரியும்.
  • இறுதியாக கால் டம்ளர் நெய் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறி விடுங்கள். ஆரம்பத்தில் சொன்னது போலவே அரை மணி நேரத்தில் எளிதாக தயார் செய்யலாம்.
  • தண்ணீர் படாமல் இருந்தால் இரண்டு நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம்.

இது போன்ற உணவு கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

மேலும் படிங்கஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் சாப்பிட்டு இருக்கீங்களா ? அளப்பரிய சுவைக்கான ரெசிபி

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP