herzindagi
akkaravadisal recipe

ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் சாப்பிட்டு இருக்கீங்களா ? அளப்பரிய சுவைக்கான ரெசிபி

ஸ்ரீரங்கம் கோயில் சாமி பிரசாதம் அக்காரவடிசலை சுவை மாறாமல் வீட்டில் செய்யணுமா ? இந்த செய்முறையை பின்பற்றுங்க...
Editorial
Updated:- 2024-06-25, 09:08 IST

ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் வழங்கப்படும் சாமி பிரசாதங்களில் அக்காரவடிசல் பிரதானமான ஒன்று. ஸ்ரீரங்கம் மட்டுமல்ல திருச்சியில் உள்ள பல கோயில்களில் அக்காரவடிசல் சாமி பிரசாதமாக வழங்கப்படுகிறது. அக்காரவாசலும் சர்க்கரை பொங்கலும் வெவ்வேறு. அக்காரவடிசல் செய்வதற்கு பயன்படுத்தும் வெல்லத்தின் தேர்வு முக்கியமானது. வாருங்கள் அக்காரவடிசலை ருசி பார்க்கலாம்.

iyengar style akkaravadisal recipe

அக்காரவடிசல் செய்யத் தேவையானவை

  • புது அரிசி
  • பாசிப் பருப்பு
  • நெய்
  • வெல்லம்
  • தண்ணீர்
  • ஏலக்காய் பொடி
  • பச்சை கற்பூரம்
  • உப்பு
  • முந்திரி
  • உலர் திராட்சை

அக்காரவடிசல் குறிப்பு

  • அக்காரவடிசல் புது அரிசியில் செய்ய வேண்டிய உணவாகும். பழைய அரிசியில் செய்தால் உதிர் உதிராக இருக்கும். புது அரிசியில் செய்தால் மட்டுமே நன்கு குழைந்து வரும்.
  • குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் கால் லிட்டர் பால் ஊற்றி ஒரு டம்ளர் அரிசி என்றால் அதில் பாதி அளவு பாசிப்பருப்பு போட வேண்டும்
  • 200 கிராம் அரிசிக்கு 100 கிராம் பாசிப்பருப்பு. இந்த இரண்டையும் சேர்த்து 300 கிராம் வெல்லம் போடுவதே சரியான அளவு.

மேலும் படிங்க  இளநீர் பாயாசம் எனும் அமிர்தம்! மெய் மறக்கும் சுவை

அக்காரவடிசல் செய்முறை

  • குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் புது அரிசி, பாசி பருப்பு, தண்ணீர், பால் ஊற்றி குக்கரில் நான்கு விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்
  • அரிசி பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்து குழைந்துவிடும்.
  • இப்போது கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரில் வேக வைத்த சாதத்தை போடவும். இதிலும் கால் லிட்டர் பால் ஊற்றுங்கள்.
  • இந்த நிலையில் அக்காரவடிசல் செய்வதற்கு குறைந்தது அரை மணி நேரம் எடுக்கும். எனவே மிதமான தீ- ற்கும் குறைவாக வைத்து சாதத்தை பாலில் கொதிக்க விடவும்
  • இதன் பிறகு கால் ஸ்பூனுக்கும் குறைவாக ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் போட்டு கலந்து விடுங்கள்.
  • இப்போது 300 கிராம் பவுடர் வெல்லம் சேருங்கள். இதை போட்டவுடன் அக்காரவடிசலின் நிறம் முற்றிலுமாக மாறும். ஒரு சிட்டிகை உப்பு போடுங்கள்.
  • அடுத்ததாக 100 மில்லி லிட்டர் நெய் ஊற்றவும். அக்காரவடிசலில் பயன்படுத்தும் நெய் அதற்கு உரிய சுவையை அளிக்கிறது.
  • இதனிடையே ஒரு பேனில் 100 மில்லி லிட்டர் நெய் ஊற்றி அது உருகிய பிறகு தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும். இதை அப்படியே நெய், பாலில் வேகும் சாதத்தின் மீது ஊற்றுங்கள்.
  • நெய் நன்றாக கலந்து கண்களில் தென்படாத வரை கிளறிக் கொண்டே இருங்கள்.
  • இறுதியாக இன்னும் 100 மில்லி லிட்டர் நெய் சேர்த்து கலந்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்து விடுங்கள். சாமி பிரசாதம் அக்காரவடிசல் தயார்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com