herzindagi
image

கறிவேப்பிலையுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள்; நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்

தினமும் சாப்பாட்டிலிருந்து வேண்டாம் என்று தூக்கி எரியும் கறிவேப்பிலையில் தான் உடலுக்கு வலுசேர்க்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.
Editorial
Updated:- 2025-08-21, 23:26 IST

கறிவேப்பிலையை ஏன் சாதத்தில் சேர்க்கிறீர்களா? ஒதுக்கித்தானா வைக்கிறோம் அப்புறம் எதுக்கு? என்பது போன்ற கேள்விகளை நிச்சயம் ஒருமுறையாவது வீடுகளில் கேட்டிருப்போம். ஆனால் கறிவேப்பிலையில் உள்ள நன்மைகளை அறிந்த யாரும் இனி கறிவேப்பிலையை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு இதில் ஏராளமான நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதோ அவற்றில் சில உங்களுக்காக.

கறிவேப்பிலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

முடி வளர்ச்சியும் கறிவேப்பிலையும்:

கறிவேப்பிலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முடி வளர்ச்சி தான். ஆம் கறிவேப்பிலையை எந்தளவிற்கு உணவில் சேர்த்துக் கொள்கிறோர்களோ? தலைமுடி நீளமாகவும், கருமையாகவும் வளரும் என்பார்கள். கறிவேப்பிலையை எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் தினமும் காலையில் கறிவேப்பிலையை அப்படியே மென்று சாப்பிடலாம். இதில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

மேலும் படிக்க: இந்த மூலிகை தேநீரை குடித்தால் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும்

சர்க்கரை அளவு கட்டுப்படுத்துதல்:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சந்தித்து வரும் பிரச்சனைகளில் முக்கியமானது சர்க்கரை நோய். அளவுக்கு அதிகமாக கலோரிகளை எடுத்துக் கொள்ளும் போது உடலின் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பதில்லை. எனவே தான் முறையான உணவு பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இயற்கையான முறையில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கறிவேப்பிலை சாறு அல்லது கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்:

கறிவேப்பிலையை தினமும் காலையில் உட்கொள்ளும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறது. இதில் உள்ள இயற்கையான நறுமணம் மனதிற்கு ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கிறது.


ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் கறிவேப்பிலை:

நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் எதுவும் எளிதில் ஜீரணமாவதில்லை. இதற்கு பெருஞ்சீரகம் சாப்பிடலாம் கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுகள் உட்கொள்வதற்கு முன்னதாக காலையில் வெறும் வயிற்றில் கட்டாயம் கறிவேப்பிலை சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.

கண் பார்வையை சீராக்கும் கறிவேப்பிலை:

கறிவேப்பிலையை சிறுவர்கள் வேண்டாம் என்று தூக்கி எரிந்தாலும் இதில் உள்ள நன்மைகளைச் சொல்லி சாப்பிட சொல்லவும். அதிகமாக மொபைல் மற்றும் தொலைக்காட்சிகள் பார்ப்பதால் குழந்தைகள் கண் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கறிவேப்பிலையைக் கட்டாயம் சாப்பிட சொல்ல வேண்டும். இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துகிறது.

 

 

இனி எவ்வித தயக்கமும் இல்லாமல் கறிவேப்பிலையை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் கட்டுரைகளைப் படிக்க வேண்டும் என்றால் Herzindagi வுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com