பொங்கல் பண்டிகைக்கான ஸ்பெஷல் இனிப்பு வகைகளில் அனைவரது வீடுகளிலும் பாயாசம் கட்டாயம் இடம்பெறும். பாயாசத்தில் பல வகைகள் இருப்பதால் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்களுக்கும் விதவிதமான பாயாசம் தயாரித்து சுவைத்து மகிழலாம். ஏற்கெனவே சேமியா பாயாசம் எப்படி செய்வது என வாசகர்களுக்காக ரெசிபி பகிரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாயாசத்திலும் வெவ்வேறு சுவை கிடைப்பதால் ஒவ்வொருவருக்கும் விதவிதமான பாயாசம் பிடிக்கும். அந்தவகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஜவ்வரிசி பாயாசம். இதை வீட்டில் தயாரிக்கும் போது பலருக்கும் பிரச்சினை ஏற்படும். காரணம் பாயாசத்தில் ஜவ்வரிசியை அதிகமாகப் போட வாய்ப்புண்டு அல்லது சேமியா அதிகம் போட்டு பாயாசத்தை மிகவும் கெட்டியாக்கி விட வாய்ப்புண்டு.
எனவே ஜவ்வரிசி பாயாசம் தயாரிக்கும் போது ஜவ்வரிசி, தண்ணீர், பால், சேமியா பயன்படுத்தும் அளவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அளவும், பக்குவமும் சரியாகத் தெரிந்துவிட்டால் ஜவ்வரிசி பாயாசம் அற்புதமாக அமைந்துவிடும்.
ஜவ்வரிசி பாயாசம் செய்யத் தேவையானவை
- மூன்று ஸ்பூன் சர்க்கரை
- நெய்
- மூன்று ஸ்பூன் ஜவ்வரிசி
- மூன்று ஸ்பூன் சேமியா
- காய்ந்த திராட்சை
- ஏலக்காய்
- முந்திரி பருப்பு
- அரை லிட்டர் பால்
செய்முறை
- சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அது சற்று சூடான பிறகு தேவையான அளவு முந்திரி பருப்பு மற்றும் காய்ந்த திராட்சை சேர்க்கவும்.
- பல இடங்களில் தேவையான அளவு என குறிப்பிட்டு எழுதக் காரணம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது இனிப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள விரும்பாத நபர்கள் குறைந்த அளவில் இனிப்பூட்டும் பொருட்களை பயன்படுத்தலாம் என்ற புரிதலுக்காகவே.
- முந்திரி பருப்பு பொன்னிறத்தில் தென்பட்டவுடன் மூன்று ஸ்பூன் சேமியா போடவும்.
- வறுத்த சேமியாவை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இந்த பாயாசத்தில் சேமியா உதிரி உதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் வறுத்த சேமியாவை பயன்படுத்தவில்லை. வெறும் சேமியாவை வாங்கி அதை நெய்யில் போட்டு வறுக்கிறோம்.
- சேமியாவை போட்ட பிறகு கூடுதலாக நெய் சேர்க்க கூடாது, ஏற்கெனவே இருக்கும் நெய்யில் தான் சேமியாவை வறுக்க வேண்டும்.
- இதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஜவ்வரிசியை முழுவதுமாக போடவும்
- ஒரு நிமிடத்திற்கு ஜவ்வரிசி நெய்யில் வறுபட்ட பிறகு 350 மில்லி தண்ணீர் சேர்க்கவும்
- குறைந்த தீயில் ஜவ்வரிசியை வேக வைக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு 20 நிமிடங்கள் வரை ஆகலாம்
- 60 விழுக்காடு அளவிற்கு ஜவ்வரிசி வெந்தவுடன் அரை லிட்டர் பால் சேர்க்கவும்
- தீயை அதிகப்படுத்தி பாலை நன்கு கொதிக்கவிடவும்
- 90 விழுக்காடு அளவிற்கு ஜவ்வரிசி வெந்த பிறகு வறுத்து வைத்திருக்கும் சேமியா கலவையைப் பயன்படுத்தவும்
- ஐந்து நிமிடங்களுக்கு குறைந்த தீயில் பால் மற்றும் சேமியாவை கொதிக்க விடுங்கள்
- தற்போது நான்கு அல்லது ஐந்து ஏலக்காயை இடித்து பாலில் சேர்க்கவும்
- கடைசியாக பாலில் மூன்று ஸ்பூன் சர்க்கரை போட்டு ஒரு நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்
இதன் பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிட்டு ஜவ்வரிசி பாயாசத்தை கிளறிவிட்டு ஐந்து நிமிடங்களுக்குத் தனியாக வைத்திருங்கள். அவ்வளவு தான் சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation