பொங்கல் பண்டிகைக்கான காலை உணவிலும், மதிய உணவிலும் உளுந்த வடை இல்லை என்றால் பொங்கல் சிறப்பு உணவில் முழு திருப்தி கிடைக்காது. உளுந்த வடை அல்லது மசால் வடை இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். உளுந்த வடை செய்வது மிகக் கடினமான காரியம் அல்ல. ஆனால் நீங்கள் கடையில் இருந்து வாங்கும் உளுந்த பருப்பின் தரம் மற்றும் அதனை அரைக்கும் விதமே உளுந்த வடையின் சுவையைத் தீர்மானிக்கும்.
உளுந்த வடை செய்யத் தேவையானவை
- உளுந்த பருப்பு
- பெருங்காயம்
- உப்பு
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- தண்ணீர்

செய்முறை
- உளுந்த பருப்பை நீங்கள் மிக்ஸி அல்லது கிரைண்டரில் எளிதாக அரைத்து விடலாம். எனினும் கிரைண்டரில் அரைப்பதற்கு முன்னுரிமை அளியுங்கள்.
- 150 கிராம் உளுந்த பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பதற்கு முன்பாக நான்கு அல்லது ஐந்து முறை நன்கு கழுவ வேண்டும்
- இதன் பிறகு நீங்கள் ஊற வைத்த உளுந்த பருப்பை மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்க வேண்டும் என்றால் அதற்கு முன்பாக ஊற வைத்த உளுந்த பருப்பை ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
- ஏனென்றால் மிக்ஸியில் மாவை அரைக்க உங்களுக்கு சில நிமடங்கள் போதும். அப்போது மிக்ஸியின் மோட்டார் அதிக சூட்டை வெளிப்படுத்தும் என்பதால் வடை மாவில் சூடு ஏறக்கூடும்.
- ஆனால் கிரைண்டரில் அரைக்க நேரம் எடுக்கும் என்பதால் மாவின் தன்மை பாதிக்கப்படாது. வடையும் நன்றாக வரும்.
- மிக்ஸியில் அரைத்தாலும், கிரைண்டரில் அரைத்தாலும் தண்ணீர் சேர்ப்பதில் மிகக் கவனமாக இருங்கள்.
- உளுந்த மாவை அரைத்த பிறகு அரை டீஸ்பூன் பெருங்காயம், அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்
- இதோடு இரண்டு பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு இஞ்சியை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் சேர்த்து அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்யவும்
- ஏறக்குறைய உளுந்த வடை தயாரிப்பில் 90 விழுக்காடு வேலை முடிந்துவிட்டது. இறுதியாக ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்கு சூடான பிறகு உளுந்த மாவை கையில் எடுத்துக் கட்டை விரலைப் பயன்படுத்தி அதில் ஓட்டை போட்டு கடாயில் மெதுவாக செலுத்தவும்
- வடை பொறிந்தவுடன் வெளியே எடுத்து பத்து விநாடிகளுக்கு அதிலிருக்கும் எண்ணெய் வடிந்த பிறகு சாப்பிட்டால் வடையின் ருசியில் நீங்கள் மெய்மறந்து விடுவீர்கள்
- தேங்காய் சட்னி அல்லது சாம்பார் இந்த மெதுவடைக்கு அற்புதமான காம்போ என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. தவறாமல் பொங்கல் பண்டிகைக்கு ருசி பாருங்கள்.
மேலும் படிங்கவெண் பொங்கலுடன் ருசிக்க முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி ?

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation