
வயதானவுடன் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக 40 வயதிற்குள் நுழைந்த பிறகு மெனோபாஸ் நெருங்கும் போது மாற்றங்கள் இன்னும் வேகமாக ஏற்படுகின்றன. அதனால்தான் 40 வயதிற்குப் பிறகு முடியை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் இன்று உங்களுக்குச் சொல்லபோகிறோம்.
இந்த பதிவும் உதவலாம்: முடி ஒல்லியா மெலிந்து போச்சா... அடர்த்தியான முடிக்கு இந்த 3 உணவுகள் போதும்!

எந்த வயதினராக இருந்தாலும் முடி பராமரிப்பின் முதல் விதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு முடியை சரியாக அலசுவது மிகவும் முக்கியம் குறிப்பாக முடி உலர்ந்து அல்லது எண்ணெய் நிறைந்ததாக இருந்தால் கவனமாக அலச வேண்டும். பொதுவாக எண்ணெய் பசையுள்ள கூந்தல் உள்ளவர்கள் தினமும் தலைமுடியைக் அலசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், ஆனால் அவ்வாறு செய்வது தலைமுடி கோட்ட தொடங்கும். எனவே கூந்தல் வறண்டிருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு 2 முறையும், எண்ணெய் பசையாக இருந்தால் 3 முறையும் அலசலாம்.
40 வயதில் முடியை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். வயதானவுடன் சருமம் மற்றும் உச்சந்தலையில் பல மாற்றங்கள் வரும். உங்கள் உடலில் நீரேற்றம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் சரியான அளவு தண்ணீரை உட்கொள்வது அவசியமாகிறது மேலும் தலைமுடியின் ஈரப்பதத்தை குறைக்க அனுமதிக்காத சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்ற வேண்டும். இதற்கு தேங்காய் நீரால் முடியைக் அலசலாம். இது மட்டுமின்றி தலைமுடிக்கு கண்டிஷனரைப் பயன்படுத்தலாம்.

இந்த வயதில் தினமும் வெப்பமூட்டும் பொருட்கள் அல்லது கருவிகள் மூலம் முடியை ஸ்டைல் செய்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது முடியை சேதப்படுத்தும் மற்றும் அதன் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றும். தலைமுடியை இயற்கையான பொருட்களால் வளர்க்க முயற்சிக்க வேண்டும்.
கூந்தலுக்கு உடனடி அழகைக் கொடுக்கும் பல ரசாயனங்கள் நிறைந்த பொருட்களை சந்தையில் காணலாம். அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கூந்தலில் ஸ்ட்ரைட்னிங், பம்மிங், கர்லிங் போன்றவற்றையும் கவனமாக பரிசீலித்த பின்னரே செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தலைமுடி இயற்கையாக இருக்கும் மற்றும் சேதமடைவதை தவிர்க்கும்.

பெண்களைப் பொறுத்தவரை எண்ணெய் தடவுவது மிகவும் சோம்பேறித்தனமான வேலையாகத் தோன்றுகிறது. ஆனால் நம் தலைமுடிக்கு எண்ணெயை விட சிறந்த இயற்கை முடி டானிக் இருக்க முடியாது. குறிப்பாக தேங்காய், பாதாம் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் தலைமுடியை வேர்களில் இருந்து வலிமையாக்குகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது முடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: கடுகு எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளம் வயது நரை முடி சுத்தமாக இருக்காது!
இந்தக் கட்டுரையைப் பற்றிய உங்கள் கருத்தையும் கருத்துப் பெட்டியில் தெரிவிக்க வேண்டும்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் இதுபோன்ற கட்டுரையை படிக்க Herzindagi-யுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com