Semiya Payasam Recipe : சுவையான சேமியா பாயாசம் செய்வது எப்படி ?

பாயாசம் என்பது சுபநிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் இனிப்பு உணவாகும். தமிழர் விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம்வகிக்கிறது.

Semiya Pal Payasam
Semiya Pal Payasam

வீட்டில் எந்தவொரு விஷேமாக இருந்தாலும் அதில் பாயாசத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சுப நிகழ்ச்சிக்கு வருபவர்கள் சமைத்த சாப்பாடு, சைட் டிஷ் ஆகியவற்றை சாப்பிடுகிறார்களோ இல்லையோ பாயாசத்தை ருசி பார்க்க வேண்டும் என விரும்புவார்கள். காலத்திற்கு ஏற்ப பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் வெட்டுவது வாடிக்கையாகி விட்டாலும் 20-30 ஆண்டுகளுக்கு முன்னர் அனைவரது வீட்டிலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தாய்மார்களின் கைவண்ணத்தில் பாயாசம் அல்லது கேசரி இடம்பெறும்.

தற்போதைய தலைமுறையினர் பசியை மட்டுமே மனதில் வைத்து ஹோட்டல்களில் ஆர்டர் செய்வதை வாடிக்கையாக்கிவிட்டதால் பாயாசம் செய்முறை மறந்திருக்கும். அப்படி பாயாசத்தின் செய்முறையை மறந்த பெண்களுக்காகவும், பொங்கல் பண்டிகை ஸ்பெஷல் உணவில் பாயாசம் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதாலும் அதன் செய்முறையை பற்றி பகிர்ந்துள்ளோம்.

Semiya Payasam in mini pot

பாயாசம் செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் போதுமானது.

சேமியா பாயாசம் செய்யத் தேவையானவை

  • வறுத்த சேமியா (Roasted Vermicelli)
  • தண்ணீர்
  • நெய்
  • பால்
  • ஏலக்காய் பொடி
  • முந்திரி பருப்பு
  • உலர்ந்த திராட்சை
  • சர்க்கரை

சேமியா பாயாசம் செய்முறை

  • பெரிய கடாயில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதித்த பிறகு வறுத்த சேமியாவை போடவும்
  • இதனுடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து சேமியாவை வேக வைக்கவும்
  • இரண்டு நிமிடங்களிலேயே சேமியா 50 விழுக்காடு அளவிற்கு வெந்துவிடும்
  • தற்போது அரை லிட்டர் காய்ச்சிய பாலை கடாயில் சேர்க்கவும்
  • இனி இந்த பாலில் தான் சேமியா வேக வேண்டும்
  • ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருங்கள்
  • சேமியா நன்கு வெந்த பிறகு 150 கிராம் சர்க்கரை சேர்க்கவும்
  • இதனுடன் அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடியை போட்டு சேமியாவை நன்றாகக் கிண்டவும்
  • தற்போது அடுப்பை ஆஃப் செய்துவிட்டு கடாயை கீழே இறக்கிவிடுங்கள்
  • ஒரு பேனில் கெட்டியாக இருக்கும் நெய் மூன்று ஸ்பூன் போடவும்
  • அதை சூடுபடுத்தி சேமியா பாயாசத்திற்கு தேவையான அளவு முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும்
  • நெய்யின் சூட்டில் முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பொறிந்தவுடன் அவற்றைப் பாயாசத்தில் சேர்க்கவும்
  • அரை மணி நேரத்தில் நீங்கள் சேமியா பாயாசத்தை சாப்பிட்டுவிடுவீர்கள் என்றால் இறுதியாகப் பால் சேர்க்க தேவையில்லை, ஏனென்றால் இந்தப் பாயாசம் அரை மணி நேரத்திற்கு பிறகே கெட்டியாகும்.
  • சாப்பிட ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஆகும் என நினைத்தால் இறுதியாக அரை டம்ளர் காய்ச்சிய பாலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் பொங்கல் பண்டிகைக்கான சுவையான சேமியா பாயாசம் ரெடி

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP