herzindagi
independence day day recipes

Tricolor Pulao : சுதந்திர தினத்தன்று, இந்த மாதிரி கலர்ஃபுல்லான புலாவ் செய்து அசத்துங்க!

உங்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்க இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள புலாவ் ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-08-11, 18:35 IST

விடுமுறை நாள் என்றாலே கொண்டாட்டம்தான். நமது தேசப்பற்றை உணர்த்தும் வகையில், அழகிய மூவர்ணங்கள் நிறைந்த உணவோடு இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்து இந்த சுவையான உணவை உண்டு மகிழுங்கள்.

நம் தேசத்தின் சுதந்திரம் மற்றும் வளமான கலாச்சாரத்தை போற்றும் இந்த நாளை கொண்டாடுவதற்கு உணவை விட சிறந்த வழி இருக்க முடியுமா என்ன? உங்கள் சுதந்திர  தினக் கொண்டாட்டத்தை சுவாரசியமாக்க இந்த மூவர்ண புலாவ் ரெசிபியை செய்ய மறக்காதீர்கள். புலாவ் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: தோசையில் 7 விதமா! தோசை பிரியர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!

 

தேவையான பொருட்கள்

trianga veg recipes

வெள்ளை அடுக்கு செய்ய தேவையானவை

  • பாஸ்மதி அரிசி - 1 கப்
  • தண்ணீர் - 2 கப் 
  • உப்பு - தேவையான அளவு 
  • நெய் - 1 டீஸ்பூன் 

பச்சை அடுக்கு செய்ய தேவையானவை

  • கீரை - 1 கப் 
  • பச்சை மிளகாய் - 1
  • கொத்தமல்லி இலைகள் - 1/4 கப் 
  • புதினா இலைகள் -1/4 கப் 
  • உப்பு - தேவையான அளவு 

ஆரஞ்சு அடுக்கு செய்ய தேவையானவை

  • கேரட்- 1/2 கப்(துருவியது)
  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் 
  • நெய் - 1 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 

மற்றவை 

  • நெய் - 1 டீஸ்பூன் 
  • வெங்காயம் - 1
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் 
  • பட்டாணி - 1/2 கப் 
  • உப்பு - தேவையான அளவு 
  • வறுத்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம்(விரும்பினால்) 

செய்முறை

independence day pulao

  • முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீருடன் உப்பு மற்றும் நெய் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து, வேகவைத்து வடித்து தனியாக வைக்கவும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் கீரை, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.  இதனுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கேரட்டை வேக வைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து தாளித்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். இதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.
  • வடித்த சாதத்தை மூன்றாக பிரித்துக் கொள்ளவும்.
  • ஒரு பகுதியுடன் அரைத்து வைத்துள்ள பச்சை நிற பேஸ்ட் சேர்த்து கலந்து வைக்கவும்.
  •  மற்றொரு பகுதியுடன் வதக்கிய கேரட் கலவை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கடைசியாக இருக்கும் மூன்றாவது பகுதியை கொடியின் வெள்ளை நிறத்திற்காக பயன்படுத்தலாம்.
  • பரிமாறும் சமயத்தில் முதலில் ஆரஞ்சு நிற அடுக்கையும், பின் வெள்ளை நிற அடுக்கையும் மற்றும் கடைசியாக பச்சை நிற அடுக்கையும் சேர்க்க வேண்டும். இதன் மீது வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை சேர்த்து அலங்காரம் செய்யலாம்.
  •  இதனை ஒரு தட்டு வைத்து மூடி பத்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள் பின்பு மென்மையாக கிளறி மூவர்ண புலாவை பரிமாறலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்கனுமா? இப்படி ஹெல்தியா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com