herzindagi
image

வித்தியாசமான சுவையில் பெங்காலி ஸ்பெஷல் பசந்தி புலாவ்; எளிய செய்முறை இங்கே!

சரஸ்வதி பூஜையன்று வித்தியாசமான ரெசிபி செய்ய நினைப்பவர்கள் பெங்காலியில் செய்யக்கூடிய பசந்தி புலாவ் செய்ய முயற்சியுங்கள்.
Editorial
Updated:- 2025-09-30, 22:32 IST

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான உணவுப்பழக்கங்கள் இருக்கும். அதிலும் குறிப்பிட்ட சில உணவுகள் மிகவும் பிரசித்திப் பெற்றதாகவே இருக்கும். இன்றைக்கு இதுபோன்ற ஒரு ரெசியைத் தான் பார்க்க உள்ளோம். பெங்காலியின் மிகவும் பிரபலமான பசந்தி புலாவ் எப்படி செய்வது? என்பது குறித்த சமையல் குறிப்புகள் இங்கே.

குறிப்பாக சாமி வழிபாடுகளில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உணவுகள் பிரதானமாக இடம் பெறும். இந்த வரிசையில் வரக்கூடிய சரஸ்வதி பூஜை நாளில் மஞ்சள் நிறம் கொண்ட பெங்காலி ஸ்பெஷல் பசந்தி புலாவ் செய்துப் பாருங்கள்.

 

தேவையான பொருட்கள்:

  • கோவிந்த போக் அரிசி அல்லது பாஸ்மதி அரிசி - 1 கப்
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
  • கிராம்பு - 5
  • முந்திரிப்பருப்பு - 10
  • உலர் திராட்சை - 10
  • பச்சை மிளகாய் - 3
  • நெய் - 100 கிராம்
  • தண்ணீர் - தேவையான அளவு

பெங்காலி பசந்தி புலாவ் செய்முறை:

  • கோவிந்த போக் அரிசியை வைத்து தான் இந்த ரெசிபியை பெங்காலியில் செய்வார்கள். அனைத்து டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் இவை கிடைக்கும். இந்த அரிசியில் செய்யும் போது அதே மாதிரியான சுவையைப் பெற முடியும். ஒருவேளை உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்தலாம்.
  • பசந்தி புலாவ் செய்வதற்கு எந்த அரிசியை எடுத்துள்ளீர்களோ? அதை இரண்டு முறை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி அரை டீஸ்பூன் மஞ்சள், நெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • ஒரு பெரிய கடாயில் நெய் உருகியதும், முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். முந்திரி கொஞ்சம் லேசாக வறுத்தவுடன் உலர் திராட்சையும் சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

  • பின்னர் அதே கடாயில் நெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் ஊற வைத்த அரிசியையும் உடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • ஒரு சில நிமிடங்களுக்குப் பின்னதாக இதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு மற்றும் 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • இதனுடன் பச்சை மிளகாயை கீறி சேர்க்க வேண்டும். உணவிற்குக் கொஞ்சம் காரத்தைக் கொடுக்கும். கடாயை மூடியால் இறுக்கமாக மூடிக் கொள்ளவும். 10 நிமிடங்களுக்குப் பின்னதாக அரிசி வெந்தவுடன் இதனுடன் வறுத்து வைத்து முந்திரி, உலர் திராட்சை மேல் தூவி பரிமாறினால் போதும். சுவையான பெங்காலி பசந்தி புலாவ் ரெடி.

Image Source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com