Weight Loss Chapati : எடையை குறைக்கனுமா? இப்படி ஹெல்தியா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க!

எடையை குறைக்க, ஹெல்தியான அதே சமயம் சுவையான உணவை தேடுகிறீர்களா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள சப்பாத்தி ரெசிபிக்களை ட்ரை செய்து பாருங்கள்…

weight loss roti recipe

பெரும்பாலும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களின் தேர்வு சப்பாத்தியாக தான் இருக்கும். எப்போதும் கோதுமை மாவால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிடுவதற்கு பதிலாக, அதில் கொஞ்சம் மாற்றங்களை செய்து கொண்டால் போர் அடிக்காமல் சப்பாத்தியை விரும்பி சாப்பிடலாம். மேலும் நாம் சேர்க்கக்கூடிய பொருட்கள் ஆரோக்கியமானதாக இருந்தால் எடையை குறைப்பது இன்னும் சுலபமாகும். இன்றைய பதிவில் எடை இழப்புக்கு உதவக்கூடிய சப்பாத்தி ரெசிப்பிகளை பார்க்க போகிறோம்.

சத்துமாவு சப்பாத்தி

சத்துமாவில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை கோதுமை மாவுடன் கலந்து ஹெல்தியான சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு - 2 கப்
  • சத்து மாவு - 1 கப்
  • வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது )
  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சத்து மாவு, எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சாப்டான சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவு பிசைந்து கொள்ளுங்கள்.
  • இதிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக திரட்டி இருபுறமும் வேகும் வரை சுட்டெடுத்து பரிமாறவும்.

ஓட்ஸ் சப்பாத்தி

satumavu chapathi

ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து எடை இழப்புக்கு மிகவும் உதவும். இதனை கொண்டு ஒரு அருமையான சப்பாத்தி செய்ய கற்றுக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் - 2 கப்
  • கோதுமை - ½ கப்
  • சூடான நீர் - தேவைக்கு ஏற்ப
  • ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஓட்ஸை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
  • அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
  • சூடான தண்ணீரை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும்.
  • கை பொறுக்கும் சூட்டில் மாவு பிசைந்து, சப்பாத்திகளாக திரட்டி சுட்டெடுக்கவும்.

சோயா சப்பாத்தி

oats chapati

சோயாவில் வைட்டமின்கள், புரதங்கள், இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. குறைந்த கலோரி உடைய சோயா உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு - 1 கப்
  • சோயா மாவு - 3 டீஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோயா மாவு, ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • எப்போதும் சப்பாத்தி செய்வது போல திரட்டி இருபுறமும் வேகும் வரை சுட்டெடுத்து பரிமாறவும்.

இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப சிம்பிள், ஆனா இது தான் பெஸ்ட் இறால் ரெசிபி!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP