herzindagi
image

6 மாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த செர்லாக்; வீட்டிலேயே தயார் செய்யும் முறை!

தாய்ப்பாலுக்கு அடுத்தப்படியாக குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்கும் போது கட்டாயம் வீட்டில் தயார் செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது.
Editorial
Updated:- 2025-10-26, 00:10 IST


பிறந்த குழந்தைகளுக்குத் தொடர்ந்து ஆறு மாத காலங்களுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் தரக்கூடாது. எந்தளவிற்கு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருகிறோமோ? அந்தளவிற்கு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு குழந்தைகள் புசுபுசுவென்று குண்டாகவும் செய்வார்கள். அதே சமயம் ஆறு மாதத்திற்குப் பிறகு நிச்சயம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் போதுமானதாக இருக்காது. இதனால் தான் புதிய தாய்மார்கள்ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு இணை உணவுகளைக் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

அரிசி கஞ்சி, கேப்பை கூழ், வேக வைத்த ஆப்பிள், பாசிப்பருப்பு சாதம் போன்றவற்றைக் கொடுக்க தயார் ஆவார்கள். இதோடு கடைகளில் விற்பனையாகும் செர்லாக்குகளையும் கடைகளில் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். பல நேரங்களில் குழந்தைகளுக்கு இவை ஒத்துக் கொள்வதில்லை. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் வீட்டிலேயே செர்லாக்கைத் தயார் செய்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: ஒரு வயது வரை குழந்தைகளுக்கு அம்மாக்கள் கொடுக்க வேண்டிய உணவுகள்!

குழந்தைகளுக்கு செர்லாக் தயார் செய்யும் வழிமுறைகள்

  • அரிசி - 100 கிராம்
  • துவரம் பருப்பு - 50 கிராம்
  • பச்சை பயறு - 50 கிராம்
  • சுண்டல் - 50 கிராம்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • பாசிப்பருப்பு - 50 கிராம்
  • பாதாம்- 3

மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே!

  • மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கொஞ்சம் சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வீட்டில் தயார் செய்யும் செர்லாக் ரெடியாகிவிட்டது.
  • இதைத் தினமும் காலையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சிறிதளவு தண்ணீருடன் செர்லாக் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். கொஞ்சம் கட்டியானதும் இறக்கிவிடவும்.
  • பின்னர் சூடு ஆறியவுடன் குழந்தைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடலாம். குழந்தைகள் தங்களது உடல் வளர்ச்சிக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.


பயன்கள்:

துவரம் மற்றும் பாசிப்பருப்பில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் அதிகளவில் உள்ளதால் உடல் எடையை அதிகரிப்பதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சரி செய்ய உதவுகிறது. அரிசி மற்றும் பாதாம் போன்ற பிற பொருட்களில் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதோடு சீரகம் சேர்க்கப்படுவதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக உதவுகிறது.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com