
முருங்கையை அதிசய மரம் என்று அழைக்கப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அதன் இலைகள், காய்கள், விதைகள் என ஒவ்வொரு பகுதியும் உங்கள் கூந்தலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி, சின்க் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இதில் உள்ளன. இவை அனைத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.
வைட்டமின் ஏ, உங்கள் உச்சந்தலையை ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக வைத்து, பொடுகு மற்றும் வறட்சியை தடுக்கிறது. வைட்டமின் சி, கொலஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது கூந்தலை வலுப்படுத்தும் ஒரு கட்டமைப்பு போன்றது. சின்க் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால் முடியின் வேர்க்கால்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் முருங்கையை எடுத்துக் கொள்ளும் வழிமுறைகளை பார்க்கலாம்.

மேலும் படிக்க: Chia seed: அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இந்த 5 சியா விதை ஹேர்பேக்குகளை பயன்படுத்தவும்
நீங்கள் விரைவான வழிமுறைகளை விரும்புபவராக இருந்தால், முருங்கை பொடி உங்களுக்கு சரியான தேர்வாகும். இது உலர்ந்த முருங்கை இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. தினமும் ஒரு தேக்கரண்டி முருங்கை பொடியை சிறிது தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
முருங்கை பொடி, தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்தது. இவை உங்கள் கூந்தலின் முக்கிய புரதமான கெரட்டின் உருவாக்கத்திற்கு அடிப்படை பொருட்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது முடி உதிர்வதை குறைத்து, அதன் அடர்த்தியை அதிகரித்து, இயற்கையான பளபளப்பை மீண்டும் கொண்டு வரும்.
மேலும் படிக்க: சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களை தினசரி கடைபிடிக்கவும்
இது தவிர முருங்கை கீரையில் இருந்து சாறு தயாரித்தும் குடிக்கலாம். முருங்கை கீரையை தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறுடன் சேர்த்து அரைத்து இதை தயாரிக்கலாம். இதன் சுவை கசப்பாக இருப்பதாக உணர்ந்தால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு சுமார் 30 - 50 மில்லி லிட்டர் என்ற அளவில் இதனை குடிக்கலாம். குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், உங்கள் உடல் ஊட்டச்சத்துகளை சிறப்பாக உறிந்து கொள்ள உதவும்.

இவற்றில் உங்களுக்கு ஏற்ற வகையில் முருங்கையை எடுத்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து, குடிக்கும் போது சுமார் 6 முதல் 8 வாரங்களில் நல்ல பலன் கிடைப்பதை உணர முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com