
கூந்தல் ஆரோக்கியத்தில் முருங்கையின் பங்கு மிகப் பெரியது. அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தொடங்கி முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்துவது வரை முருங்கை பல முக்கிய பணிகளை ஆற்றுகிறது. அந்த வகையில் முருங்கையின் நன்மைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை இந்தப் பதிவில் காணலாம்.
மேலும் படிக்க: கூந்தலை ஆரோக்கியமாக பராமரித்து முடி உதிர்வுக்கு தீர்வு காண வேண்டுமா? இந்த 5 இயற்கை பானங்களை குடித்து பயன் பெறவும்
இதில் உள்ள வைட்டமின் ஏ உச்சந்தலையை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. இதனால் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும். இதில் காணப்படும் வைட்டமின் சி, கூந்தல் கட்டமைப்பை வலுப்படுத்தும் கொலஜன் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதன் இரும்புச்சத்து, முடியின் வேர்க்கால்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்கிறது. இது தவிர முடி வளர்ச்சியை அதிகப்படுத்த சின்க் பயன்படுகிறது.

சில அழகு சாதன பொருட்களில் தற்போது முருங்கை எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உங்கள் அன்றாட உணவில் முருங்கையை சேர்த்துக் கொள்வதன் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும். இதன் மூலம் கூந்தல் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
அதனடிப்படையில், முருங்கை பொடி இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். காய வைத்த முருங்கை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்தப் பொடி, கீரையை போன்ற சுவையை கொண்டிருக்கும். ஒரு தேக்கரண்டி பொடியை ஸ்மூத்தி, இளநீர் அல்லது தேனுடன் கலந்த சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். மேலும், இதை சாலட்களின் மீதும் தூவலாம் அல்லது அன்றாட உணவான பருப்பு வகைகளிலும் சேர்க்கலாம்.
மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்
இந்தப் பொடியில் உள்ள புரதமும், அமினோ அமிலங்களும் கெரட்டின் உற்பத்திக்கு பங்களிக்கிறது. கெரட்டின் தான் முடிக்கு வலிமையையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி உதிர்வு குறைந்து, அடர்த்தி அதிகரித்து, இயற்கையான பளபளப்பு உருவாகும்.
புத்துணர்ச்சி மற்றும் அதிக பலன் தேடுபவர்களுக்கு முருங்கை இலை சாறு சரியாக இருக்கும். முருங்கை இலைகளை தண்ணீர் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து இதை தயாரிக்கலாம். இது லேசான கசப்பு சுவையுடன் இருக்கும். இத்துடன் சிறிது தேன் சேர்ப்பதன் மூலம் சுவையை மேம்படுத்தலாம். தினமும் 30 முதல் 50 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.

இது உடலை நச்சுத்தன்மையிலிருந்து நீக்க உதவுகிறது மற்றும் அழற்சியை குறைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான சருமம் இயற்கையாகவே வேகமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
இது தவிர முருங்கை சாறை தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலையில் தேய்க்கலாம். இதை 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் மிதமான ஷாம்பு கொண்டு குளித்து விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை பெற முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com