herzindagi
kulambu recipe tamil

Vatha Kulambu Recipe in Tamil: ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வத்தக் குழம்பு

ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வத்தக் குழம்பு செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-01-28, 12:18 IST

மீல்ஸ் உணவில் சாம்பார், ரசம் எவ்வளவு முக்கியமோ அதே போல் வத்தக் குழம்பும் மிக மிக முக்கியமான ஒன்று. வத்தக் குழம்பு இல்லாமல் மீல்ஸ் முழுமையடையாது. அதிலும் ஹோட்டலில் பரிமாறப்படும் வத்தக் குழம்புக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. கெட்டியாக, சரியான காரம், புளிப்பு சுவையில் இருக்கும் ஹோட்டல் வத்தக் குழம்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ள நினைக்கும் பெண்கள் இங்கு ஏராளம். மசாலா பொருட்களின் அளவு தான் இந்த வத்தக் குழம்பின் சுவைக்கு மிக முக்கியமான காரணம்.

அதை சரியான அளவில் பக்குவமாய் பயன்படுத்தினால் போதும், ஹோட்டல்களில் பரிமாறப்படும் வத்தக் குழம்பின் சுவையை வீட்டிலேயே கொண்டு வந்துவிடலாம். அந்த வகையில் அச்சு அசல் ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வத்தக் குழம்பு வைப்பது எப்படி? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் – ¼ டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 3
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – ½ டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு – 10
  • வத்தல் – ½ கப்

இந்த பதிவும் உதவலாம்:திருவையாறு ஸ்பெஷல் அசோகா அல்வா

  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி – 3
  • மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 11/2 டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள் – 11/2 டேபிள் ஸ்பூன்
  • புளி கரைசல் – 1 கப்
  • வெல்லம் – 2 துண்டு

vathakulamnu recipe

செய்முறை

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பல் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.
  • இப்போது அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் தேவையான அளவு உப்பு மற்றும் புளி கரைசலை சேர்க்கவும்.
  • இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் குழம்பை கொதிக்க விடவும்.
  • பின்பு அதில் வெல்லத்தை சேர்த்து குழம்பை நன்கு கலந்து விடவும்.
  • இறுதியாக மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வத்தல்களை சேர்த்து நன்கு வறுக்கவும்.
  • வறுத்த இந்த வத்தல்களை குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
  • சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் வத்தக் குழம்பு தயார்.

இந்த பதிவும் உதவலாம்:அட்டகாசமான ஊறுகாய் ரெசிபி வீட்டிலேயே செய்யலாம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com