herzindagi
image

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் ஒரு டம்ளர் குடிச்சு பாருங்க; மூட்டு வலி பறந்து போகும்

மூட்டு வலி உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை தீர்க்க முடவாட்டுக்கால் கிழங்கு சூப் குடித்து பாருங்கள். முடவாட்டுக்கால் கிழங்கு சூப் வெஜ் ஆட்டுக்கால் சூப் என்றும் அழைக்கப்படுகிறது. முடவாட்டுக்கால் கிழங்கு சூப் எப்படி செய்வது என பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-07-25, 11:15 IST

உணவே மருந்து என்பது 100/100 விழுக்காடு தமிழர்களே பொருந்தும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலனுக்கான மருத்துவ பண்புகள் கொண்ட பல உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார். இப்பொதெல்லாம் மூட்டு வலி வந்தால் பெண்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். அக்காலத்தில் மூட்டு வலிக்கு இந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப் குடித்துள்ளனர். தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் முடவாட்டுக்கால் கிழங்கு கிடைப்பதில்லை. ஏற்காடு, கொல்லிமலை போன்ற பகுதிகளில் முடவாட்டுக்கால் கிழங்கு விற்கப்படுகிறது. இதை நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி கொள்ளலாம். வாருங்கள் முடவாட்டுக்கால் கிழங்கு சூப் எப்படி செய்வது என பார்ப்போம்.

mudavattukal kilangu soup

முடவாட்டுக்கால் கிழங்கு செய்ய தேவையானவை

  • முடவாட்டுக்கால் கிழங்கு
  • இஞ்சி
  • பூண்டு
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • சீரகம்
  • மிளகு
  • பட்டை
  • கிராம்பு
  • மஞ்சள் தூள்
  • கரம் மசாலா
  • கொத்தமல்லி
  • மிளகு தூள்

முடவாட்டுக்கால் கிழங்கு செய்முறை

  • 100 கிராம் முடவாட்டுக்கால் கிழங்கு எடுத்து கத்தி கொண்டு தோல் சீவி தண்ணீரில் இரண்டு முறை நன்கு கழுவவும்.
  • அதன்பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போடுங்கள். இதனுடன் 20 கிராம் இஞ்சி துண்டு, ஐந்து பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, முக்கால் ஸ்பூன் சீரகம், முக்கால் ஸ்பூன் மிளகு போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் போல் முடவாட்டுக்கால் கிழங்கை அரைக்கவும்.
  • அடுத்ததாக குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும்.
  • அதன் பிறகு மிக்ஸியில் அரைத்த பேஸ்ட், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு கலந்துவிடவும்.
  • அரை ஸ்பூன் உப்பு போட்டு, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவிட்டு பத்து நிமிடங்களுக்கு வேக விடுங்கள்.
  • விசில் அடித்து அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு அப்படியே வடிகட்டவும்.
  • இறுதியாக கால் ஸ்பூன் மிளகு, கொஞ்சம் கொத்தமல்லி தூவி கலந்துவிட்டு ஒரு டீஸ்பூன் குடித்து பாருங்கள்.
  • நிச்சயமாக முடவாட்டுக்கால் கிழங்கு சூப் எண்ணற்ற நன்மைகளை தரும்.
  • இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

மேலும் படிங்க  ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் ஹண்டி எப்படி செய்யணும் தெரியுமா ? ருசி அள்ளும்

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com