• Search
Close
எதையாவது தேடுகிறீர்களா?
Search

    Pickle Recipe at Home in Tamil: அட்டகாசமான ஊறுகாய் ரெசிபி வீட்டிலேயே செய்யலாம்

    இந்த பதிவில் எளிமையாக வீட்டில் செய்யக்கூடிய 3 அட்டகாசமான ஊறுகாய் ரெசிபிக்களை பார்க்க போகிறோம். 
    author-profile
    Published -26 Jan 2023, 09:00 ISTUpdated -26 Jan 2023, 10:16 IST
    Next
    Article
    pickle images

    தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு எப்போதுமே இடம் உண்டு. நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் குளிர்காலத்தில் அடிக்கும் வெயிலில் தான் ஊறுகாய் போடும் மாங்காய், எலுமிச்சை பழங்களை காய வைப்பார்கள். அப்போது தான் அது சரியான பதத்தில் பழுத்து வரும். நம் வீடுகளில் அனைத்து உணவுகளுடனும் ஊறுகாய் பரிமாறப்படுகிறது. உணவின் சுவை எப்படி இருந்தாலும் சரி, அதனுடன் ஊறுகாய் இருந்தால் போதும் .சுவை பன்மடங்கு அதிகமாகி விடும். பராத்தா முதல் சாதாரண அரிசி பருப்பு சாதம் வரை எல்லா உணவுகளுடனும் ஊறுகாய் விரும்பி உண்ணப்படுகிறது. காரம் விரும்பி சாப்பிடுபவர்கள் ஊறுகாயை சேர்த்து கொள்வார்கள். இன்னும் சிலருக்கு காய்கறி பொரியல் போல ஊறுகாய். 

    வீட்டில் காய்கறிகள் சமைக்காத போதெல்லாம், அம்மா உடனே சாப்பாட்டுக்கு சைடிஷாக வைப்பது ஊறுகாயை தான். இன்றும் பல வீடுகளில் ஊறுகாய் போடப்படுகிறது. அதே நேரம் அதற்கு நிறைய நேரமும் எடுக்கிறது. ஆனால் இனி அப்படி இல்லை. மாறிவரும் இந்த அவசர உலகத்தில் ஊறுகாயை விரைவில் தயாரித்து விடலாம். 

    இந்த பதிவில் நீங்கள் உடனடியாக தயாரிக்கக்கூடிய சில ஊறுகாய் ரெசிபிக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மாங்காய் முதல் கேரட் என  வித்தியாசமான இந்த ஊறுகாய் ரெசிபிக்கள் நிச்சயம் உங்கள் வாயில் எச்சில் ஊற வைக்கும்.

     

     

    இந்த பதிவும் உதவலாம்: காரசாரமான மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்

     

     

    வெள்ளரிக்காய் ஊறுகாய்

    வெள்ளரிக்காய் ஊறுகாய் செய்ய உங்களுக்கு மிகவும் அடிப்படையான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். வெறும் 20 நிமிடங்களில் இந்த ஊறுகாயை தயார் செய்துவிடலாம். எப்படி செய்வது? என பார்ப்போம் வாருங்கள். 

    தேவையான பொருட்கள்

    • வெள்ளரிக்காய் 2-3
    • வெள்ளை வினிகர் - 1 கப்
    • சர்க்கரை - 2 டீஸ்பூன்
    • கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன் 
    • உப்பு – தேவையான அளவு
    • சிவப்பு மிளகாய் தூள்/சில்லி பிளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்

    செய்முறை

    • வெள்ளரிக்காயை நீங்கள் எந்த வடிவில் எப்படி சாப்பிட விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் நறுக்கி கொள்ளவும். தோலை நீக்குவதும் அப்படியே சாப்பிடுவதும் உங்கள் விருப்பம். 
    • இப்போது ஒரு கண்ணாடி ஜாடியை எடுத்து கொண்டு அதில் நறுக்கிய வெள்ளரி துண்டுகளை போடவும். பின்பு அதில் சர்க்கரை, வெள்ளை வினிகர், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் அல்லது சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்கு கிளறி விடவும்.  
    • ஜாடியை மூடி 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வளவு தான் சுவையான வெள்ளரிக்காய் ஊறுகாய் தயார். இதை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
    • இந்த ஊறுகாயை சூடான இடத்தில் வைக்கக்கூடாது. சீக்கிரத்தில் கெட்டுப்போகலாம். முடிந்தவரை சூடான பகுதியில் வைக்காமல் குளிர்ச்சியான இடத்தில் வைத்து பராமரிக்கவும். 

     

    mango pickle

     

    தக்காளி ஊறுகாய்

    ஆந்திர சமையலில் தக்காளி ஊறுகாய் மிகவும் பிரபலம். இது உலர்ந்த தக்காளியை வைத்து தயாரிக்கப்படுகிறது. விரைவில் செய்யக்கூடிய இந்த ஊறுகாயின் செய்முறையை இப்போது பார்க்கலாம். 

    தேவையான பொருட்கள்

    • தக்காளி -250 கிராம்
    • சிவப்பு மிளகாய் தூள் - ¼ டீஸ்பூன்
    • மஞ்சள் - 1/4 டீஸ்பூன் 
    • புளி - 25 கிராம்
    • பூண்டு - 4-5
    • வெந்தயம் - 1 டீஸ்பூன் 
    • கடுகு -1 டீஸ்பூன் 
    • எண்ணெய் -2 டீஸ்பூன்
    • உப்பு – தேவையான அளவு
    • கறிவேப்பிலை - 4-5
    • காய்ந்த சிவப்பு மிளகாய் - 4-5
    • பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

    செய்முறை

    • முதலில் தக்காளியை சுத்தமாக கழுவி தனியாக எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பின்பு அதில் புளியை போட்டு அது கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்.
    • இப்போது அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் வெந்தயத்தை போட்டு வறுக்கவும். அதிலிருந்து நறுமணம் வர ஆரம்பித்ததும் வெந்தயத்தை இறக்கி தனியாக  வைக்கவும். 
    • இதே போல் கடுகையும் வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். இப்போது வெந்தயம், - கடுகு இரண்டையும் மிக்ஸியில் பொடியாக்கி கொள்ளவும். 
    • அடுத்து அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காயத்தை சேர்த்து கூடவே நறுக்கிய தக்காளியையும் போட்டு  3 முதல் 4 நிமிடங்கள் நன்கு வதக்கவும். 
    • இதன் பின்பு கொதிக்க வைத்த புளி கரைசலை நன்கு மசித்து, பிழிந்து, அதை தக்காளியுடன் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
    • இப்போது மற்றொரு கடாயில் வடிக்கட்டியை வைத்து அதில் கொதித்த தக்காளி புளி கரைசலை ஊற்றி ஒரு கரண்டியால் நன்கு அழுத்தவும்.
    •  வடிக்கட்டியில் தங்கும் புளி மற்றும் தக்காளியின் நார்கள் மற்றும் தோல்களை  நீக்கிவிட்டு வெறும் கரைசலை மட்டும் மிக்ஸி அல்லது பிளெண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
    • இப்போது இந்த கலவையில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள கடுகு – வெந்தயம் பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும். 
    • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி. அதனுடன் சிறிது கடுகு சேர்த்து  தாளித்து அதில் கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும். இதில் உரித்த பூண்டு பல்லை சேர்த்து  வதந்தியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி  புளி கரைசலை சேர்த்து 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில்  சுண்ட விடவும்.
    • இப்போது அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். தக்காளி ஊறுகாய் ஆறியதும் அதை காற்று புகாத ஒரு ஜாடியில் சேமித்து தேவைப்படும் போது உணவுடன் வைத்து சாப்பிடவும்.அவ்வளவு தான் சூப்பரான தக்காளி ஊறுகாய் தயார். 
    • ஃப்ரிட்ஜில் வைத்து 6 மாதங்கள் வரை இந்த ஊறுகாயை சேமிக்கலாம்.  

    இஞ்சி ஊறுகாய்

    இஞ்சி ஊறுகாயின் ருசி சற்று காரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கலாம். ஆனால் குளிர்காலத்தில் இந்த ஊறுகாய் செரிமானத்திற்கு உதவுகிறது. வாருங்கள் இப்போது செய்முறையை பார்ப்போம்.

    lemon pickele.

     

    தேவையான பொருட்கள்

    • இஞ்சி - 250 கிராம்
    • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
    • புளி - 100 கிராம்
    • வெல்லம் - 50 கிராம்
    • மிளகாய் தூள்
    • உப்பு – தேவையான அளவு
    • வெந்தயம் - 1 டீஸ்பூன் 
    • கறிவேப்பிலை - 3-4
    • கடுகு - 1 டீஸ்பூன் 
    • எண்ணெய் - 1/2 கப்
    • காய்ந்த  சிவப்பு மிளகாய் - 2
    • பூண்டு - 3-4
    • பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

    செய்முறை

    • முதலில் இஞ்சியை சுத்தமாக கழுவி காய வைக்கவும். பின்பு தோலை நீக்கி  நீண்ட துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
    • கடாயை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். பின்பு அதில் புளியை போட்டு ஊற வைக்கவும். புளி கரைந்ததும் அடுப்பை அணைத்து புளியை மட்டும் பிழிந்து வெளியே எடுத்து விடவும். புளி கரைசலை பாத்திரத்தில் ஊற்றி தனியாக வைக்கவும். 
    • இப்போது கடாயில் வெந்தயத்தை போட்டு வறுத்து  அதை ஆற வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும். 
    • பின்பு அடுப்பில் அதே கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு வதக்கவும். இஞ்சி நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும்.
    • இப்போது எடுத்து வைத்துள்ள புளி கரைசலில் மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அதை மிக்ஸியில் அல்லது பிளெண்டரில் அரைக்கவும். அதனுடன் வெல்லம் மற்றும் வெந்தய பொடி சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு அரைத்து எடுத்து  கொள்ளவும்.
    • அடுத்து, இஞ்சி ஊறுகாய்க்கு தாளிப்பை தயார் செய்யவும். 
    • கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, பூண்டு சேர்க்கவும். அதன் பிறகு கறிவேப்பிலை மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து  தாளிக்கவும். கறிவேப்பிலை நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும். 
    • இப்போது ஒரு பாத்திரத்தில் வதக்கிய இஞ்சி துண்டுகளை கொட்டி அதில் அரைத்த கலவையை சேர்த்து அதன் மேலே தாளிப்பை கொட்டி கிளற வேண்டும். இப்போது சுவையான இஞ்சி ஊறுக்காய் தயார். 
    • இதை ஒரு ஜாடியில் நிரப்பி  மதிய உணவு அல்லது இரவு உணவுடன் வைத்து சாப்பிடலாம். 
    • இந்த 3 வகையான ஊறுகாய்களை செய்வது மிகவும் எளிது  என்பது இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதை நீங்கள் 3-4 நாட்களுக்கு வெயிலில் வைத்து காய வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. 
     
     
     
     
     
     

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

    Images Credit: freepik

    பொறுப்புத் துறப்பு

    உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com