ஸ்டார் ஹோட்டல்கள் எப்போதும் ஏன் அவ்வளவு வாசனை நிரம்பியதாக இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கு வாசனை திரவியங்கள் முக்கியம் காரணம் ஆகும். பூக்களின் வாசனை முதல் மரங்களின் வாசனை வரை, உயர்தர ஹோட்டல்களில் அமைதியான மற்றும் மறக்க முடியாத சூழலை உருவாக்க தனித்துவமான நறுமணங்களை பயன்படுத்துகின்றனர்.
நீங்களும் உங்கள் வீட்டில் செய்யும் சில எளிய மாற்றங்கள் மூலம் அதே ஸ்டார் ஹோட்டல்களின் வாசனையை உருவாக்க முடியும். அதற்கான சில எளிய குறிப்புகளை இதில் காணலாம்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடுகளை போக்க தினசரி செய்ய வேண்டியவை
இதில் மிக முக்கியமாக டிஃப்பியூசர்களை நீங்கள் பயன்படுத்தலாம். அவை உயர்தர ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் நறுமணங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமநிலையான மற்றும் நுட்பமான உணர்விற்காக எலுமிச்சை, பெர்கமோட் (bergamot), மல்லிகை, அம்பர் (amber) அல்லது மஸ்க் (musk) ஆகியவற்றின் மனம் நிரப்பிய டிஃப்பியூசர்களை உங்கள் வீட்டில் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு புத்துணர்ச்சியை உங்களால் உணர முடியும்.
உங்கள் வீட்டின் குளியலறையில் யூகலிப்டஸை தொங்க விடுவது, ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும். நீராவியில் இவை படும் போது, இதன் மனம் உங்களுக்கு பிடித்தமான வகையில் அமையும். இதற்காக குளியலறையின் ஷவரில் (Shower) ஒரு கொத்து யூகலிப்டஸை தொங்க விடலாம். இதன் வாசனையும் உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும், உங்கள் வீட்டின் ஜன்னலோரங்களில் உலர்ந்த யூகலிப்டஸை, சிறிய ஜாடியில் வைக்கலாம். இது வீட்டை சுற்றி நல்ல நறுமணம் வீசச் செய்யும்.
மேலும் படிக்க: நீரிழிவு நோயை வீட்டிலிருந்தே ஆயுர்வேத முறைப்படி எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்
பெரும்பாலான ஸ்டார் ஹோட்டலின் அறைகளில் எப்போதுமே மெழுகுவர்த்திகள் ஏற்றி இருப்பதை நாம் பார்த்திருப்போம். இவை, ஒளிக்காக பயன்படுத்தப்படுவதை விட, நறுமணத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அந்த அளவிற்கு இப்போது பல நறுமணங்களில் மெழுகுவர்த்திகள் கடைகளில் கிடைக்கின்றன. இதற்காக, சோயா அல்லது தேங்காய் மெழுகினால் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகளை நீங்கள் வாங்கலாம். இதுவும் உங்கள் வீட்டின் தரத்தை உயர்த்தி காண்பிக்கும்.
சில சமயங்களில் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தரக்கூடும். அது போன்ற நேரத்தில் உடனடியாக உங்கள் வீட்டில் நறுமணம் வீசச் செய்ய வேண்டுமானால் இன்ஸ்டன்ட் ஸ்ப்ரேகளை பயன்படுத்தலாம். இவற்றை உங்கள் வீட்டின் படுக்கையறை, வரவேற்பறை ஆகியவற்றில் ஸ்ப்ரே செய்வதன் மூலம் நல்ல மனமாக இருக்கும். இவை பல வாசனைகளில் கிடைக்கின்றன.
நிறைய நட்சத்திர விடுதிகளில் சிட்ரஸ் மனம் கொண்ட சோப்புகளை பயன்படுத்துவார்கள். இவை வாசனை மட்டுமின்றி சுத்தமான ஒரு உணர்வையும் கொடுக்கும். இத்துடன் மாண்டரின் (mandarin), திராட்சை, இஞ்சி அல்லது அலோ வேரா (aloe vera) போன்ற ஃபிளேவர்கள் நிரம்பிய சோப்புகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com