இரானி தேநீருக்காக இனி ஹைதராபாத் செல்ல வேண்டாம்... உங்கள் வீட்டிலேயே ஈசியாக தயாரிக்கலாம்

உங்கள் வீட்டிலேயே இரானி தேநீரை எவ்வாறு சுலபமாக தயாரிக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். தேநீரை விரும்பி குடிக்கும் எல்லோருக்கும் இது மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
image
image

தேநீர் பிரியரா நீங்கள்? அப்படியானால், நிச்சயம் இரானி சாய் (தேநீர்) குறித்து நீங்கள் அறிந்திருக்க கூடும். அதன் தனித்துவமான சுவை, அடர்த்தியான அமைப்பு மற்றும் கிரீமி தன்மைக்காக மிகவும் பிரபலமானது. ஹைதராபாத்தின் பரபரப்பான சாலைகளில் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள பல கஃபேக்களில் இரானி சாய் அதன் பிரத்தியேகமான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த தேநீரின் தனிச்சிறப்பே அதன் அடர்த்தியான, கொழுப்பு நிறைந்த பால் (Full cream milk), லேசான இனிப்பு மற்றும் மேலே மிதக்கும் கிரீம் தான். இதை வீட்டில் செய்வது கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், சரியான முறைப்படி செய்தால், ஒரு சில நிமிடங்களில் நீங்களும் இந்த இரானி தேநீரை உங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

Chai

இரானி தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:

கொழுப்பு நிறைந்த பால் - 2 கப்,

தண்ணீர் - 1 கப்,

தேயிலை - 2 டேபிள்ஸ்பூன்,

சர்க்கரை - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் (தேவைக்கேற்ப),

ஏலக்காய் - 2,

குங்குமப்பூ - 4 முதல் 5,

ஃப்ரெஷ் கிரீம் - சிறிதளவு.

செய்முறை:

முதலில், பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேயிலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், நெருப்பின் அளவைக் குறைத்து, தண்ணீர் அடர் நிறமாக மாறும் வரை கொதிக்க விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் கொழுப்பு நிறைந்த பால் ஊற்றி சூடு படுத்த வேண்டும். இந்த நேரத்தில் ஏலக்காய் மற்றும் குங்குமப்பூவை சேர்க்கலாம். இது பாலுக்கு சிறந்த மணம் மற்றும் சுவையை கொடுக்கும்.

மேலும் படிக்க: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

பால் மெதுவாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதை தேநீர் டிகாக்‌ஷனில் சிறிது சிறிதாக ஊற்றவும். இந்த கலவையை மேலும் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். இது தேநீருக்கு அதன் தனித்துவமான அடர்த்தியையும், முழுமையான சுவையையும் கொடுக்கும்.

Tea

இப்போது, உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். இரானி தேநீர் சற்று அடர்த்தியாகவும், கிரீமியாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, அவசரமாக தயார் செய்ய வேண்டாம்.

இரானி தேநீரை பரிமாறும் முறை:

தேநீரை கோப்பைகளில் ஊற்றி, அதன் மேல் ஒரு ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும். இதன் அசல் அனுபவத்தை பெற விரும்பினால், களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கோப்பைகளில் கொடுக்கலாம். இது பாரம்பரியமாக இருப்பதுடன், அதன் சுவையை மேம்படுத்தும்.

நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்:

இரானி தேநீரின் அடர்த்தியான அமைப்பிற்காக எப்போதும் கொழுப்பு நிறைந்த பாலை மட்டுமே பயன்படுத்தவும். நீங்கள் விரும்பினால் குங்குமப்பூ சேர்க்கலாம். ஆனால், இது தேநீருக்கு ஒரு அருமையான பொன்னிறத்தையும் மணத்தையும் சேர்க்கும். மேலும், தேநீரின் மேல் சேர்க்கப்படும் கிரீமை தவிர்க்க வேண்டாம். இது கூடுதல் சுவையை அளிக்கிறது. இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டிலேயே சுவையான இரானி தேநீர் தயாரிக்கலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP