herzindagi
healthy tiffin recipes

Healthy Tiffin Recipes : சைடு டிஷ் தேவை இல்லை, இப்படி ஹெல்த்தியா ஒரு வெஜிடபிள் சப்பாத்தி செஞ்சு அசத்துங்க!

ஒரே மாதிரியான டிபன் செய்த போர் அடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான அதே சமயம் ரொம்ப ஹெல்த்தியான ஒரு டிபன் ரெசிபியை இன்றைய பதிவில் காணலாம்…
Editorial
Updated:- 2023-07-15, 11:39 IST

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் இல்லாமல் நம் வீட்டு சமையல் இல்லை. இதை தினமும் சாப்பிட்டாலும் போர் அடித்து விடும். அதே சமயம் 2 நாள் இந்த உணவுகள் எல்லாம் கிடைக்காவிட்டாலும் மனம் இட்லி/தோசைக்கு ஏங்க ஆரம்பித்து விடும். இதில் கொஞ்சம் மாற்றங்களை செய்து கொண்டால் போதும் தினம் ஒரு டிபன் செய்யலாம். வீட்டில் உள்ளவர்களும் ஒரே மாதிரியான டிபன் என்று புகார் சொல்ல மாட்டார்கள். 

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி : இன்றைய பதிவில் கோதுமை மாவு மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஒரு அற்புதமான டிபன் ரெசிபியை பார்க்க போகிறோம். இதில் காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இருப்பதால் சைட் டிஷ் எதுவும் தேவைப்படாது. இதில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் மற்றும் மசாலாக்களை சேர்த்து மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால் காய்கறிகளை வதக்காமல் நேரடியாக சேர்ப்பதால் போதுமானவரை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது துருவி கொள்ளவும். இப்போது மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: இந்த ஓட்ஸ் ஸ்மூத்தி, உங்கள் எடை இழப்பை எளிதாக்கும்! 

 

தேவையான பொருட்கள் 

mixed veg roti

  • கோதுமை மாவு - 1 கப் 
  • கேரட் - ¼ கப் 
  • பீன்ஸ் - ¼ கப்
  • காலிஃப்ளவர்/ப்ரோக்கோலி - ¼ கப் 
  • குடமிளகாய்  - 1 டேபிள் ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் 1-2
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • சில்லி ஃபிளேக்ஸ் = ½ டீஸ்பூன்
  • பெருங்காயம் - சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
  • நெய் / எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை 

quick tiffin recipes

  • ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய், கொத்தமல்லி இலைகள் மற்றும் காலிஃப்ளவர் சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் இதில் கீரையையும் நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். 
  • இதனுடன் காரத்திற்கு ஏற்ப சில்லி ஃப்ளேக்ஸ், பெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.  
  • இது சில்லி ஃப்ளேக்ஸ் பதிலாக மிளகாய் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம். 
  • மாவு மற்றும் காய்கறிகளை ஒன்று சேர நன்கு கலந்து கொள்ளவும். 
  • கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து  சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். 
  • மாவை சிறிய பகுதிகளாக எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 
  • இதனை உங்களால் முடிந்தவரை மெல்லியதாக திரட்டி கொள்ளவும். 
  • தவா அல்லது தோசைக்கல்லை சூடாக்கி, தயாராக வைத்துள்ள சப்பாத்தியை போடவும். 
  • மிதமான தீயில் வைத்து இருபுறமும் நன்கு வேகும் வரை சுட்டெடுக்கவும். 
  • தேவைப்பட்டால் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிற புள்ளிகள் வரும் வரை காத்திருக்கவும். 
  • இதில் காய்கறிகள் சேர்த்திருப்பதால் சைட் டிஷ் எதுவும் தேவைப்படாது. இந்த ஹெல்த்தியான மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்:  வேகவைத்த முட்டையில் சுக்காவா, கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com