herzindagi
chidambaram special gothsu recipe

Chidambaram Gothsu : தக்காளி தேவையில்லை! பாரம்பரிய சுவையில் சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு செய்து சாப்பிடுங்க!

அதிகரித்து வரும் தக்காளி விலையை சமாளிக்க தக்காளி இல்லாத சட்னி வகைகளை தேடுகிறீர்களா? இந்த சிதம்பரம் கொத்சு ரெசிபியை கட்டாயமாக முயற்சி செய்து பாருங்கள்… 
Editorial
Updated:- 2023-07-14, 16:01 IST

சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில், சீரக சம்பா சாதத்துடன் இந்த கத்திரிக்காய் கொத்சு பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. வாட்டிய கத்திரிக்காயின் வாசத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் ஃபிரஷ்ஷாக அரைத்த மசாலாக்களின் கலவையுடன் சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும். இதை இட்லி, தோசை அல்லது உங்களுடன் பரிமாறலாம்.

இதை கேஸ் அடுப்பில் வைத்து வாட்ட விருப்பம் இல்லாதவர்கள் அதை நேரடியாக வதக்கியும் கொத்சு செய்யலாம். ஆனால் பாரம்பரிய முறைப்படி நெருப்பில் வாட்டிய கத்திரிக்காயை இந்த ரெசிபிக்கு பயன்படுத்த வேண்டும். கத்திரிக்காயின் மீது எண்ணெயை தடவி அதை நெருப்பில் வாட்டி எடுக்க வேண்டும். பிறகு அதன் வெளிப்புற தோலை எடுத்து விட்டு கத்திரிக்காயை மசித்து கொத்சு செய்ய பயன்படுத்தலாம். கத்திரிக்காயை வதக்கியோ அல்லது நெருப்பில் வாட்டியோ உங்கள் விருப்பத்திற்கேற்ப ரெசிபியை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இப்போது சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்:  வேகவைத்த முட்டையில் சுக்காவா, கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

 

தேவையான பொருட்கள் 

brinjal recipes

  • கத்திரிக்காய் 5-6
  • சின்ன வெங்காயம் 15
  • பூண்டு 8-10
  • வெந்தயம் - ¼ டீஸ்பூன் 
  • மிளகு - ¼ டீஸ்பூன் 
  • சீரகம் - ½ டீஸ்பூன் 
  • கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
  • தனியா - 3 டீஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய் 5-7
  • பெருங்காயம் - ¼ டீஸ்பூன் 
  • கடுகு - ¼ டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  • நல்லெண்ணெய் 3-4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

brinja gothsu

  • முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து தயாராக வைக்கவும். கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 
  • இப்போது வெறும் கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வெந்தயம், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். 
  • மசாலாக்கள் ஆறிய பிறகு பொடித்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால் அளவுகளை அதிகரித்து கொத்சு பொடியை சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். 
  • இப்போது அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கத்திரிக்காய், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை வதக்கிக் கொள்ளவும். 
  • இவை ஓரளவு நிறம் மாறும் வரை வதங்கினால் போதுமானது. கத்திரிக்காயை முழுமையாக வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 
  • கத்திரிக்காயின் சூடு தணிந்த பிறகு இதனை மிக்ஸியில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக லேசாக மட்டும் அரைத்துக் கொள்ளவும். இதை முழுமையாக அரைக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 
  • இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். 
  •  இப்போது புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிவிடவும். 
  • எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்க வேண்டும். 
  • நீங்கள் விரும்பினால் இதில் சிறிய துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். 
  • அட்டகாசமான இந்த கொத்சு ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: உடலில் இரத்தம் வேகமாக ஊற இந்த 3 ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com