முன்பெல்லாம் தமக்குப் பிடித்த ஹீரோக்களின் திரைப்படம் எப்போது வெளியாகும்? என்று காத்திருந்த காலங்கள் அனைத்தும் மலையேறிப் போச்சு. தற்போது மிகவும் பிரபலமான ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் திரைப்படம் எப்போது இணையத்தில் அதாவது ஓடிடியில் வெளியாகும் என சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி திரைப்படம் எப்போது வெளியாகிறது? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.
அமேசான் பிரைமில் தலைவன் தலைவி:
பசங்க, வம்சம், மெரினா, கடைக்குட்டி சிங்கம். நம்ம வீட்டு பிள்ளை என குடும்ப கதைக்களத்தை வைத்து தொடர்ச்சியாக படங்களை இயக்கி வருகிறார் இயக்குநர் பாண்டியராஜ். பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட சுவாரஸ்சியமாக மேற்கொள்ளும் இவரது படைப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மக்கள் நாயகன் என்றழைக்கப்படும் விஜய் சேதுபதியை வைத்து தலைவன் தலைவி படத்தை இயக்கி வெற்றிக் கண்டுள்ளார் பாண்டியராஜ்.
திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவரும் இத்திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது அதன் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் படி விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படமான தலைவன் தலைவி வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமில்லாது விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவன் தலைவி கதை சுருக்கம்:
விஜய் சேதுபதியின் 51 ஆவது திரைப்படமான தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கியுள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இடையே நடைபெறும் கோபம், சண்டை மற்றும் குடும்ப சிக்கல்களை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது தலைவன் தலைவி. விஜய் சேதுபதிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நித்யா மேனன் மற்றும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அனைவரும் தன்னுடைய யதார்த்த நடிப்பால் பெரும் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றர்.
மேலும் படிக்க:இந்த வாரம் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ ஓடிடியில் எதிர்பார்ப்புக்களுடன் வெளியாக இருக்கும் 3 தமிழ் படங்கள்
திருமணத்திற்குப் பின்னதாக குடும்பத்தில் எத்தனையோ சண்டை சச்சரவுகள் வரலாம். இதற்கெல்லாம் விவாகரத்து தீர்வாகாது என்பதை மையமாக வைத்து நகைச்சுவையோடு யதார்த்தமாக கதை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Image credit - Twitter
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation