
இன்றைக்குப் பரபரப்பான வாழ்க்கை சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பலருக்கு சமைத்த உணவுகளை சாப்பிடுவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை. அப்படியாக நேரம் கிடைத்தாலும் அதிகளவில் செய்துவிட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து 2 அல்லது 3 நாட்களுக்குக் கூட பயன்படுத்துவார்கள். இதை தவறான செயல். சமைக்கும் உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது உடலுக்கு பல வகைகளில் தீங்கு விளைவிக்கும். அனைத்து உணவுகளை சூடுபடுத்தினால் நச்சுத்தன்மை என்று கேட்டால் நிச்சயம் இருக்காது. அவை என்னென்ன? என்பது குறித்த பட்டியல் உங்களுக்காக.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளின் பட்டியலில் உள்ளது காளான். காளான் கிரேவி, காளான் 65, என பிடித்த ரெசிபிகள் சாப்பிட்டு மகிழ்ந்திருப்போம். சில நேரங்களில் காளான் ரெசிபிகள் மீதம் ஆகிவிட்டால் பிரிட்ஜில் வைத்து அடுத்த வேளைக்கு மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவோம். இவ்வாறு செய்யும் போது இதில் உள்ள புரதம் மற்றும் தாதுக்களின் சத்துக்கள் குறைவதோடு செரிமான அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: மறந்துகூட சமையலுக்கு இந்த 5 எண்ணெய்களை பயன்படுத்தாதீங்க; லிஸ்ட் இதோ
உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றால் பீட்ரூட்டை உணவில் ஜூஸ், பொரியல் என உங்களுக்குப் பிடித்தவாறு உட்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், மீண்டும் பீட்ரூட்டை சூடாக்கி சாப்பிடுவதன் மூலம், இதில் உள்ள நைட்ரேட் சத்துக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் உடலுக்கு பல வகைகளில் தீங்கு விளைவிக்குகிறது.
சிக்கன் அனைவருக்கும் பிடித்த ரெசிபிகளில் முக்கியமானது. வாரத்தின் இறுதி நாட்கள் என்றாலே பலரது வீடுகளில் சிக்கன் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். மீதம் இருந்தால் மறுநாள் காலையில் தோசைக்கு வைத்துக் கொள்ளலாம் என பிரிட்ஜில் வைத்துவிடுவார்கள். இது முற்றிலும் தவறு. குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சிக்கன் குழம்பை சூடுபடுத்தும் போது புரத சத்துக்களை இழந்துவிட நேரிடும். இதோடு செரிமான பிரச்சனையையும் ஏற்படுத்தக்கூடும். ஒருவேளை சூடாக்கி சாப்பிட வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் மிதமான சூட்டில் வைத்து சூடேற்ற வேண்டும்.
வீடுகளில் பள்ளிச் செல்லும் குழந்தைகள் இருந்தால் நிச்சயம் வாரத்திற்கு இருமுறையாவது உருளைக்கிழங்கு பொரியல் இடம் பெறும். மீதமுள்ள உருளைக்கிழங்கை சூடுபடுத்தி சாப்பிடும் போது, பாக்டீரியாக்கள் அதிகளவில் உருவாகக்கூடும். இதனால் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.
சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெய் மீதம் இருந்தால் அதை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. குறைவான அளவில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சமைத்த உணவுகள் மீதம் இருந்தால் தண்ணீர் ஊற்றி பழைய சோறாக சாப்பிடலாம். ஒருவேளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது நச்சுத்தன்மை அதிகரிப்பதோடு புட்பாய்சன் ஆகிவிடும்.
Image Credit - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com