herzindagi
image

பூண்டு வாசனையை கையில் இருந்து விரட்ட உதவும் கிச்சன் ஹேக்குகள் இதோ

பூண்டு போன்ற மசாலாப் பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்துவதால் உணவில் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்ல, இதன் வாசனை கைகளில் ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்துவிடும். 
Editorial
Updated:- 2025-08-18, 16:19 IST

நம்முடைய சமையல் அறையில் பூண்டு இல்லாமல் உணவின் சுவை முழுமையடையாது. சாம்பார், ரசம், சட்னி, புளிக்குழம்பு போன்ற ரெசிபிகளுக்கு கூடுதல் சுவையை அளிப்பதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை மட்டுமல்ல பல நேரங்களில் உடல் உபாதைகளையும் சரி செய்யக்கூடிய திறன்களையும் கொண்டுள்ளது. இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இவற்றை உரித்து சமைப்பது என்பது பெண்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். எப்படியாவது உரித்து விட்டாலும் இதன் வாசனை கைகளிலேயே ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கும். பல முறை சோப்புகளைத் தேய்த்துக் கழுவினால் நீங்காது. ஆம் பூண்டில் பல வகையான சல்பர் சேர்மங்கள் உள்ளது. எனவே பூண்டின் தோல் கைகளில் ஒட்டும் போது இதன் வாசனை பல நேரங்களுக்கு அப்படியே இருக்கிறது. இந்த பூண்டு வாசனையை நீக்குவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக.

மேலும் படிக்க: உணவில் சுவையை கூட்ட சிட்ரிக் அமிலத்தை எப்படி சேர்க்கலாம் என்பதை பார்க்கலாம்

பூண்டு வாசனையை நீக்க உதவும் ட்ரிக்ஸ்கள்:

டூத் பேஸ்ட்:

பற்களின் கரையை நீக்குவதற்கு மட்டுமல்ல, கைளிலிருந்து பூண்டின் வாசனையையும் நீக்க உதவுகிறது. ஒரு கையில் சிறிதளவு டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு 30 வினாடிகள் மசாஜ் செய்வதற்கு போன்ற உள்ளங்கைகள் மற்றும் கைவிரல் அப்ளை செய்யதால் போது பூண்டு வாசனை வரவே வராது.

மேலும் படிக்க: வெறும் 20 நிமிடங்களில் சுவையான சோயா கட்லெட்; ரெசிபி டிப்ஸ் இதோ

உப்பு மற்றும் பேக்கிங் சோடா:

அடுத்ததாக பூண்டு வாசனையை கைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் உப்பு அல்லது பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து பேஸ்ட் போன்ற தயார் செய்துக் கொள்ளவும். இதை கைகளில் தேய்த்து, 5 நிமிடங்களுக்குப் பின்னதாக வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். பூண்டு வாசனை முற்றிலும் இருக்காது. ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் ஸ்கின் அதாவது அதிக உணர்திறன் கொண்ட தோல்கள் என்றால் இதை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

 

எலுமிச்சை:

கைகளில் ஒட்டியுள்ள பூண்டின் வாசனையை நீக்க வேண்டும் என்றால் எலுமிச்சை சாறு உபயோகிக்கலாம். சிறிதளவு எலுமிச்சை சாறை எடுத்து உள்ளங்கைகளில் தடவி ஒரு 5 நிமிடங்களுக்குத் தேய்க்கவும். இதில் உள்ள சிட்ரிக் அமிலம் கைகளில் உள்ள வாசனையை நீக்க உதவுகிறது.

காபி:

தலைவலியை நீக்கி உடல் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு மட்டுமல்ல பூண்டு உரிக்கும் போது கைகளில் ஏற்படக்கூடிய வாசனையை நீக்கவும் காபி பவுடர் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் காபி பொடியை சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து கைகளில் தடவிக் கொள்ளவும். பின்னர் குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவும் போது வாசனை பறந்துவிடும்.

Image credit - pexels

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com