herzindagi
image

குழந்தைகளின் சாக்லேட் ஆசையை மறக்க செய்யணுமா? அப்ப இதை மட்டும் கட்டாயம் செய்திடுங்க!

குழந்தைகளுக்கு அதிகளவில் சாக்லேட் கொடுக்கும் போது, பற்களில் பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமல்ல உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Editorial
Updated:- 2025-10-29, 23:23 IST

இன்றைய குழந்தைகள் அதிகளவில் அடம்பிடிக்கும் விஷயங்களில் முக்கியமான ஒன்று சாக்லேட் வேண்டும் என்பதாகத் தான் இருக்க முடியும். அந்தளவிற்கு சாக்லேட்டின் சுவை குழந்தைளைக் கட்டிப்போட்டுள்ளது. அதற்கேற்றார் போல் சந்தைகளிலும் விதவிதமான சாக்லேட்டுகள் விற்பனையாகிறது. இப்படி குழந்தைகள் அடம்பிடித்து சாக்லேட்டுகள் சாப்பிடுவதால், பற்கள் செத்தையாவது மட்டுமின்றி உடலுக்கு பல வகைகளில் கேடு விளைவிக்கிறது. இவற்றைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால்? நிச்சயம் இந்த கட்டுரையை ஒருமுறையாவது படித்துவிட்டு சொல்லுங்கள்.

 

மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்

சாக்லேட் ஆசையை தவிர்க்கும் வழிமுறைகள்:

  • குழந்தைகள் அடம்பிடித்து சாக்லேட்டுகள் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும் போதெல்லாம் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாம். சாக்லேட்டில் இருப்பது போன்று இயற்கையான சர்க்கரையைக் கொண்டுள்ளது. உடலுக்கு ஆற்றலை அளித்து சாக்லேட் மீதான உடனடி ஆசையைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
  • சாக்லேட்டுகள் அதிகம் சாப்பிட்டு பழகிய குழந்தைகளை உடனடியாக மாற்றுவது என்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம். எனவே முழுமையான அவர்களுக்குத் தருவதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்யவும்.

மேலும் படிக்க: கடுமையான பணிச்சூழலிலும் வீட்டில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உதவும் குறிப்புகள்

 

  • சாக்லேட்டுகளுக்குப் பதிலாக வண்ணமயமான உள்ள பழங்கள், நட்ஸ்கள் போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்க முயற்சி செய்யவும்.
  • குழந்தைகள் சாக்லேட்டுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் பெற்றோர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். இதோடு வீட்டில் சாக்லேட்டுகள் வைத்திருக்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.
  • குழந்தைகளிடம் சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் என்னென் உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அவர்களுக்குத் தெளிவுப்படுத்துங்கள். எப்பொழுதாவது நிச்சயம் உங்களது குழந்தைகள் சாக்லேட்டுகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்கு ஒரு வழியாக அமையும்.

 Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com